Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்    | முன் |   வசனம்1-36 of 36    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
وَيۡلٌ لِّلۡمُطَفِّفِيۡنَۙ ﴿83:1﴾ الَّذِيۡنَ اِذَا اكۡتَالُوۡا عَلَى النَّاسِ يَسۡتَوۡفُوۡنَۖ ﴿83:2﴾ وَاِذَا كَالُوۡهُمۡ اَوْ وَّزَنُوۡهُمۡ يُخۡسِرُوۡنَؕ ﴿83:3﴾ اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَۙ ﴿83:4﴾ لِيَوۡمٍ عَظِيۡمٍۙ ﴿83:5﴾ يَّوۡمَ يَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِيۡنَؕ ﴿83:6﴾ كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡفُجَّارِ لَفِىۡ سِجِّيۡنٍؕ ﴿83:7﴾ وَمَاۤ اَدۡرٰٮكَ مَا سِجِّيۡنٌؕ ﴿83:8﴾ كِتٰبٌ مَّرۡقُوۡمٌؕ ﴿83:9﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَۙ ﴿83:10﴾ الَّذِيۡنَ يُكَذِّبُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِؕ ﴿83:11﴾ وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعۡتَدٍ اَثِيۡمٍۙ ﴿83:12﴾ اِذَا تُتۡلٰى عَلَيۡهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَؕ ﴿83:13﴾ كَلَّا بَلۡ رَانَ عَلٰى قُلُوۡبِهِمۡ مَّا كَانُوۡا يَكۡسِبُوۡنَ ﴿83:14﴾ كَلَّاۤ اِنَّهُمۡ عَنۡ رَّبِّهِمۡ يَوۡمَٮِٕذٍ لَّمَحۡجُوۡبُوۡنَؕ ﴿83:15﴾ ثُمَّ اِنَّهُمۡ لَصَالُوا الۡجَحِيۡمِؕ ﴿83:16﴾ ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَؕ ﴿83:17﴾ كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡاَبۡرَارِ لَفِىۡ عِلِّيِّيۡنَؕ ﴿83:18﴾ وَمَاۤ اَدۡرٰٮكَ مَا عِلِّيُّوۡنَؕ ﴿83:19﴾ كِتٰبٌ مَّرۡقُوۡمٌۙ ﴿83:20﴾ يَّشۡهَدُهُ الۡمُقَرَّبُوۡنَؕ ﴿83:21﴾ اِنَّ الۡاَبۡرَارَ لَفِىۡ نَعِيۡمٍۙ ﴿83:22﴾ عَلَى الۡاَرَآٮِٕكِ يَنۡظُرُوۡنَۙ ﴿83:23﴾ تَعۡرِفُ فِىۡ وُجُوۡهِهِمۡ نَضۡرَةَ النَّعِيۡمِۚ ﴿83:24﴾ يُسۡقَوۡنَ مِنۡ رَّحِيۡقٍ مَّخۡتُوۡمٍۙ ﴿83:25﴾ خِتٰمُهٗ مِسۡكٌ ؕ وَفِىۡ ذٰلِكَ فَلۡيَتَنَافَسِ الۡمُتَنــَافِسُوۡنَؕ ﴿83:26﴾ وَ مِزَاجُهٗ مِنۡ تَسۡنِيۡمٍۙ ﴿83:27﴾ عَيۡنًا يَّشۡرَبُ بِهَا الۡمُقَرَّبُوۡنَؕ ﴿83:28﴾ اِنَّ الَّذِيۡنَ اَجۡرَمُوۡا كَانُوۡا مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا يَضۡحَكُوۡنَ  ۖ ﴿83:29﴾ وَاِذَا مَرُّوۡا بِهِمۡ يَتَغَامَزُوۡنَ  ۖ ﴿83:30﴾ وَاِذَا انۡقَلَبُوۡۤا اِلٰٓى اَهۡلِهِمُ انْقَلَبُوۡا فَكِهِيۡنَ  ۖ ﴿83:31﴾ وَاِذَا رَاَوۡهُمۡ قَالُوۡۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوۡنَۙ ﴿83:32﴾ وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَيۡهِمۡ حٰفِظِيۡنَۙ ﴿83:33﴾ فَالۡيَوۡمَ الَّذِيۡنَ اٰمَنُوۡا مِنَ الۡكُفَّارِ يَضۡحَكُوۡنَۙ ﴿83:34﴾ عَلَى الۡاَرَآٮِٕكِۙ يَنۡظُرُوۡنَؕ ﴿83:35﴾ هَلۡ ثُوِّبَ الۡكُفَّارُ مَا كَانُوۡا يَفۡعَلُوۡنَ ﴿83:36﴾

83:1 அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்! 83:2 அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள். 83:3 அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள். 83:4 திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா? 83:5 ஒரு மாபெரும் நாளில், 83:6 அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள். 83:7 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, தீயவர்களின் வினைப்பட்டியல் சிறைப்பதிவேட்டில் உள்ளது. 83:8 சிறைப்பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? 83:9 அது எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். 83:10 அந்நாளில், பொய்யெனத் தூற்றுபவர்களுக்குக் கேடுதான்! 83:11 அவர்கள் எத்தகையவர்கள் எனில், கூலி கொடுக்கப்படும் நாளினை பொய் யென வாதிடுகின்றார்கள். 83:12 அதை யாரும் பொய் யெனக் கூறுவதில்லை, வரம்பு மீறக்கூடிய தீய செயல்கள் செய்யக்கூடிய ஒவ்வொருவனையும் தவிர! 83:13 நம்முடைய வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இவை பண்டைக் காலத்துக் கட்டுக்கதைகள்” என்று சொல்கின்றான். 83:14 ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது. 83:15 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள். 83:16 பின்னர், அவர்கள் உறுதியாக நரகில் வீழ்வார்கள். 83:17 பின்னர், அவர்களிடம் “நீங்கள் பொய்யெனத் தூற்றிக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும். 83:18 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, நல்லோரின் வினைப்பட்டியல் மேன்மக்களின் பதிவேட்டில் உள்ளது. 83:19 அந்த மேன்மக்களின் பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? 83:20 அது எழுதப்பட்ட ஒரு புத்தகம்; 83:21 (இறைவனிடம்) நெருக்கமான வானவர்கள் அதனைப் பாதுகாக்கின்றார்கள். 83:22 திண்ணமாக, நல்லவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள். 83:23 உயர்தரமான சாய்வு இருக்கைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். 83:24 அவர்களின் முகங்களில் சுகவாழ்வின் பொலிவை நீர் கண்டறிவீர். 83:25 முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். 83:26 அதன் மீது கஸ்தூரி முத்திரை பதிந்திருக்கும். போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்து கொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்! 83:27 மேலும், அந்த பானத்தில் ‘தஸ்னீம்’ கலந்திருக்கும். 83:28 அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள். 83:29 திண்ணமாக, குற்றம் புரிந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களை (உலகில்) ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள். 83:30 மேலும், அவர்களை இவர்கள் கடந்து செல்லும்போது கண்களால் சாடை காட்டிக் கொண்டிருந்தார்கள். 83:31 மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். 83:32 மேலும், அவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக இவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 83:33 ஆனால், அவர்களோ இறைநம்பிக்கையாளர்களை கண்காணிக்கக் கூடியவர்களாய் அனுப்பப்படவில்லை. 83:34 இன்று இறைநம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிக்கின்றார்கள். 83:35 சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தவாறு (அவர்களின் நிலைகளைப்) பார்க்கின்றார்கள். 83:36 கிடைத்துவிட்டதல்லவா, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான நற்கூலி!

  அத்தியாயம் 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்   |  முன்  |     வசனம் 1-36 of 36    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 1-36