Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 79. அந்நாஸிஆத்    | முன் |   வசனம்1-26 of 46    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
وَالنّٰزِعٰتِ غَرۡقًا ۙ ﴿79:1﴾ وَّالنّٰشِطٰتِ نَشۡطًا ۙ ﴿79:2﴾ وَّالسّٰبِحٰتِ سَبۡحًا ۙ ﴿79:3﴾ فَالسّٰبِقٰتِ سَبۡقًا ۙ ﴿79:4﴾ فَالۡمُدَبِّرٰتِ اَمۡرًا ۘ ﴿79:5﴾ يَوۡمَ تَرۡجُفُ الرَّاجِفَةُ ۙ ﴿79:6﴾ تَتۡبَعُهَا الرَّادِفَةُ ؕ ﴿79:7﴾ قُلُوۡبٌ يَّوۡمَٮِٕذٍ وَّاجِفَةٌ ۙ ﴿79:8﴾ اَبۡصَارُهَا خَاشِعَةٌ ۘ ﴿79:9﴾ يَقُوۡلُوۡنَ ءَاِنَّا لَمَرۡدُوۡدُوۡنَ فِى الۡحَـافِرَةِ ؕ ﴿79:10﴾ ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ ﴿79:11﴾ قَالُوۡا تِلۡكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۘ ﴿79:12﴾ فَاِنَّمَا هِىَ زَجۡرَةٌ وَّاحِدَةٌ ۙ ﴿79:13﴾ فَاِذَا هُمۡ بِالسَّاهِرَةِ ؕ ﴿79:14﴾ هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ مُوۡسٰىۘ ﴿79:15﴾ اِذۡ نَادٰٮهُ رَبُّهٗ بِالۡوَادِ الۡمُقَدَّسِ طُوًىۚ ﴿79:16﴾ اِذۡهَبۡ اِلٰى فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰى ۖ ﴿79:17﴾ فَقُلۡ هَلۡ لَّكَ اِلٰٓى اَنۡ تَزَكّٰى ۙ ﴿79:18﴾ وَاَهۡدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخۡشٰىۚ ﴿79:19﴾ فَاَرٰٮهُ الۡاٰيَةَ الۡكُبۡرٰى ۖ ﴿79:20﴾ فَكَذَّبَ وَعَصٰى ۖ ﴿79:21﴾ ثُمَّ اَدۡبَرَ يَسۡعٰىۖ ﴿79:22﴾ فَحَشَرَ فَنَادٰىۖ ﴿79:23﴾ فَقَالَ اَنَا رَبُّكُمُ الۡاَعۡلٰى ۖ ﴿79:24﴾ فَاَخَذَهُ اللّٰهُ نَڪَالَ الۡاٰخِرَةِ وَالۡاُوۡلٰى ؕ ﴿79:25﴾ اِنَّ فِىۡ ذٰلِكَ لَعِبۡرَةً لِّمَنۡ يَّخۡشٰىؕ ﴿79:26﴾

79:1 ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற, 79:2 மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக! 79:3 மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற 79:4 மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக! 79:5 பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக! 79:6 எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ 79:7 அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ 79:8 அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும். 79:9 அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும். 79:10 இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா, 79:11 இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?” 79:12 இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.” 79:13 உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும். 79:14 உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்! 79:15 மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா? 79:16 ‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்: 79:17 “ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான். 79:18 எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா? 79:19 மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!” 79:20 பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார். 79:21 ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான். 79:22 பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான். 79:23 மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து, 79:24 “நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான். 79:25 இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான். 79:26 அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது.

  அத்தியாயம் 79. அந்நாஸிஆத்   |  முன்  |     வசனம் 1-26 of 46    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-26
 27-46