Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 78. அந்நபா    | முன் |   வசனம்1-30 of 40    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
عَمَّ يَتَسَآءَلُوۡنَۚ ﴿78:1﴾ عَنِ النَّبَاِ الۡعَظِيۡمِۙ ﴿78:2﴾ الَّذِىۡ هُمۡ فِيۡهِ مُخۡتَلِفُوۡنَؕ ﴿78:3﴾ كَلَّا سَيَعۡلَمُوۡنَۙ ﴿78:4﴾ ثُمَّ كَلَّا سَيَعۡلَمُوۡنَ ﴿78:5﴾ اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِهٰدًا ۙ ﴿78:6﴾ وَّالۡجِبَالَ اَوۡتَادًا ۙ ﴿78:7﴾ وَّخَلَقۡنٰكُمۡ اَزۡوَاجًا ۙ ﴿78:8﴾ وَّجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتًا ۙ ﴿78:9﴾ وَّجَعَلۡنَا الَّيۡلَ لِبَاسًا ۙ ﴿78:10﴾ وَّجَعَلۡنَا النَّهَارَ مَعَاشًا ﴿78:11﴾ وَّبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا ۙ ﴿78:12﴾ وَّ جَعَلۡنَا سِرَاجًا وَّهَّاجًا ۙ ﴿78:13﴾ وَّاَنۡزَلۡنَا مِنَ الۡمُعۡصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۙ ﴿78:14﴾ لِّـنُخۡرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ ﴿78:15﴾ وَّجَنّٰتٍ اَلۡفَافًا ؕ ﴿78:16﴾ اِنَّ يَوۡمَ الۡفَصۡلِ كَانَ مِيۡقَاتًا ۙ ﴿78:17﴾ يَّوۡمَ يُنۡفَخُ فِى الصُّوۡرِ فَتَاۡتُوۡنَ اَفۡوَاجًا ۙ ﴿78:18﴾ وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتۡ اَبۡوَابًا ۙ ﴿78:19﴾ وَّ سُيِّرَتِ الۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ؕ ﴿78:20﴾ اِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادًا ۙ ﴿78:21﴾ لِّلطّٰغِيۡنَ مَاٰبًا ۙ ﴿78:22﴾ لّٰبِثِيۡنَ فِيۡهَاۤ اَحۡقَابًا ۚ ﴿78:23﴾ لَا يَذُوۡقُوۡنَ فِيۡهَا بَرۡدًا وَّلَا شَرَابًا ۙ ﴿78:24﴾ اِلَّا حَمِيۡمًا وَّغَسَّاقًا ۙ ﴿78:25﴾ جَزَآءً وِّفَاقًا ؕ ﴿78:26﴾ اِنَّهُمۡ كَانُوۡا لَا يَرۡجُوۡنَ حِسَابًا ۙ ﴿78:27﴾ وَّكَذَّبُوۡا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ ﴿78:28﴾ وَكُلَّ شَىۡءٍ اَحۡصَيۡنٰهُ كِتٰبًا ۙ ﴿78:29﴾ فَذُوۡقُوۡا فَلَنۡ نَّزِيۡدَكُمۡ اِلَّا عَذَابًا ﴿78:30﴾

78:1 இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்? 78:2 அந்த மாபெரும் செய்தியைக் குறித்தா? 78:3 அதைப்பற்றி இவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். 78:4 ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்து விடும். 78:5 ஆம்; ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்துவிடும். 78:6 நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? 78:7 மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா? 78:8 மேலும், உங்களை (ஆண்பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா? 78:9 மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா? 78:10 மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா? 78:11 மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா? 78:12 மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? 78:13 மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா? 78:14 மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா? 78:15 தானியங்களையும் தாவரங்களையும் மற்றும் 78:16 அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக! 78:17 திண்ணமாக, தீர்ப்புநாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாய் இருக்கின்றது; 78:18 (சூர்) எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக(க் கிளம்பி) வருவீர்கள். 78:19 மேலும், வானம் திறந்துவிடப்படும்; இறுதியில் அது வாயில்கள் மயமாகி விடும்! 78:20 மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும். அப்பொழுது அவை கானலாய்ப் போய்விடும். 78:21 திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது. 78:22 வரம்பு மீறியவர்களுக்கான இருப்பிடமாக உள்ளது. 78:23 அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள். 78:24 அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள். 78:25 கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர! 78:26 (இவை அவர்களின் இழிசெயல்களுக்கு) ஏற்ற கூலிதான்! 78:27 அவர்கள் கேள்விக் கணக்கு கேட்கப்படும் என்பதை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை. 78:28 மேலும், அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென முற்றிலும் மறுத்து விட்டிருந்தார்கள். 78:29 அதே நேரத்தில் நாமோ அவர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி எழுதி வைத்திருந்தோம். 78:30 “இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.”

  அத்தியாயம் 78. அந்நபா   |  முன்  |     வசனம் 1-30 of 40    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-30
 31-40