Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 77. அல்முர்ஸலாத்    | முன் |   வசனம்1-40 of 50    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
وَالۡمُرۡسَلٰتِ عُرۡفًا ۙ ﴿77:1﴾ فَالۡعٰصِفٰتِ عَصۡفًا ۙ ﴿77:2﴾ وَّالنّٰشِرٰتِ نَشۡرًا ۙ ﴿77:3﴾ فَالۡفٰرِقٰتِ فَرۡقًا ۙ ﴿77:4﴾ فَالۡمُلۡقِيٰتِ ذِكۡرًا ۙ ﴿77:5﴾ عُذۡرًا اَوۡ نُذۡرًا ۙ ﴿77:6﴾ اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَوَاقِعٌ ؕ ﴿77:7﴾ فَاِذَا النُّجُوۡمُ طُمِسَتۡۙ ﴿77:8﴾ وَ اِذَا السَّمَآءُ فُرِجَتۡۙ ﴿77:9﴾ وَاِذَا الۡجِبَالُ نُسِفَتۡۙ ﴿77:10﴾ وَاِذَا الرُّسُلُ اُقِّتَتۡؕ ﴿77:11﴾ لِاَىِّ يَوۡمٍ اُجِّلَتۡؕ ﴿77:12﴾ لِيَوۡمِ الۡفَصۡلِۚ ﴿77:13﴾ وَمَاۤ اَدۡرٰٮكَ مَا يَوۡمُ الۡفَصۡلِؕ ﴿77:14﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:15﴾ اَلَمۡ نُهۡلِكِ الۡاَوَّلِيۡنَؕ ﴿77:16﴾ ثُمَّ نُتۡبِعُهُمُ الۡاٰخِرِيۡنَ ﴿77:17﴾ كَذٰلِكَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِيۡنَ ﴿77:18﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:19﴾ اَلَمۡ نَخۡلُقۡكُّمۡ مِّنۡ مَّآءٍ مَّهِيۡنٍۙ ﴿77:20﴾ فَجَعَلۡنٰهُ فِىۡ قَرَارٍ مَّكِيۡنٍۙ ﴿77:21﴾ اِلٰى قَدَرٍ مَّعۡلُوۡمٍۙ ﴿77:22﴾ فَقَدَرۡنَا ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ ﴿77:23﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:24﴾ اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ كِفَاتًا ۙ ﴿77:25﴾ اَحۡيَآءً وَّاَمۡوَاتًا ۙ ﴿77:26﴾ وَّجَعَلۡنَا فِيۡهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسۡقَيۡنٰكُمۡ مَّآءً فُرَاتًا ؕ ﴿77:27﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:28﴾ اِنْطَلِقُوۡۤا اِلٰى مَا كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَۚ ﴿77:29﴾ اِنْطَلِقُوۡۤا اِلٰى ظِلٍّ ذِىۡ ثَلٰثِ شُعَبٍۙ ﴿77:30﴾ لَّا ظَلِيۡلٍ وَّلَا يُغۡنِىۡ مِنَ اللَّهَبِؕ ﴿77:31﴾ اِنَّهَا تَرۡمِىۡ بِشَرَرٍ كَالۡقَصۡرِۚ ﴿77:32﴾ كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفۡرٌ ؕ ﴿77:33﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:34﴾ هٰذَا يَوۡمُ لَا يَنۡطِقُوۡنَۙ ﴿77:35﴾ وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَـعۡتَذِرُوۡنَ ﴿77:36﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:37﴾ هٰذَا يَوۡمُ الۡفَصۡلِۚ جَمَعۡنٰكُمۡ وَالۡاَوَّلِيۡنَ ﴿77:38﴾ فَاِنۡ كَانَ لَـكُمۡ كَيۡدٌ فَكِيۡدُوۡنِ ﴿77:39﴾ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:40﴾

77:1 தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக; 77:2 பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக; 77:3 (மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக; 77:4 பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக; 77:5 பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக; 77:6 மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக! 77:7 எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே! 77:8 பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது, 77:9 வானம் பிளக்கப்படும்பொழுது, 77:10 மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது, 77:11 இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்). 77:12 எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது? 77:13 தீர்ப்பு நாளுக்காகத் தான்! 77:14 அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா? 77:15 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:16 நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன? 77:17 பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்! 77:18 குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம். 77:19 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:20 என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா? 77:21 மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா 77:22 ஒரு குறிப்பிட்ட காலம்வரை. 77:23 (இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்! 77:24 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:25 நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா? 77:26 உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும். 77:27 மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன? 77:28 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:29 இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்! 77:30 செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்! 77:31 அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று. 77:32 அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும். 77:33 அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும். 77:34 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:35 இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்; 77:36 எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது. 77:37 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:38 இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம். 77:39 இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்! 77:40 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

  அத்தியாயம் 77. அல்முர்ஸலாத்   |  முன்  |     வசனம் 1-40 of 50    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-40
 41-50