Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 73. அல்முஸ்ஸம்மில்    | முன் |   வசனம்1-18 of 20    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
يٰۤاَيُّهَا الۡمُزَّمِّلُۙ ﴿73:1﴾ قُمِ الَّيۡلَ اِلَّا قَلِيۡلًا ۙ ﴿73:2﴾ نِّصۡفَهٗۤ اَوِ انْقُصۡ مِنۡهُ قَلِيۡلًا ۙ ﴿73:3﴾ اَوۡ زِدۡ عَلَيۡهِ وَرَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِيۡلًا ؕ ﴿73:4﴾ اِنَّا سَنُلۡقِىۡ عَلَيۡكَ قَوۡلًا ثَقِيۡلًا ﴿73:5﴾ اِنَّ نَاشِئَةَ الَّيۡلِ هِىَ اَشَدُّ وَطۡـاً وَّاَقۡوَمُ قِيۡلًا ؕ ﴿73:6﴾ اِنَّ لَـكَ فِى النَّهَارِ سَبۡحًا طَوِيۡلًا ؕ ﴿73:7﴾ وَاذۡكُرِ اسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ اِلَيۡهِ تَبۡتِيۡلًا ؕ ﴿73:8﴾ رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذۡهُ وَكِيۡلًا  ﴿73:9﴾ وَاصۡبِرۡ عَلٰى مَا يَقُوۡلُوۡنَ وَاهۡجُرۡهُمۡ هَجۡرًا جَمِيۡلًا ﴿73:10﴾ وَذَرۡنِىۡ وَالۡمُكَذِّبِيۡنَ اُولِى النَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِيۡلًا  ﴿73:11﴾ اِنَّ لَدَيۡنَاۤ اَنۡـكَالًا وَّجَحِيۡمًا ۙ ﴿73:12﴾ وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِيۡمًا ﴿73:13﴾ يَوۡمَ تَرۡجُفُ الۡاَرۡضُ وَالۡجِبَالُ وَكَانَتِ الۡجِبَالُ كَثِيۡبًا مَّهِيۡلًا  ﴿73:14﴾ اِنَّاۤ اَرۡسَلۡنَاۤ اِلَيۡكُمۡ رَسُوۡلًا ۙ شَاهِدًا عَلَيۡكُمۡ كَمَاۤ اَرۡسَلۡنَاۤ اِلٰى فِرۡعَوۡنَ رَسُوۡلًا ؕ ﴿73:15﴾ فَعَصٰى فِرۡعَوۡنُ الرَّسُوۡلَ فَاَخَذۡنٰهُ اَخۡذًا وَّبِيۡلًا ﴿73:16﴾ فَكَيۡفَ تَتَّقُوۡنَ اِنۡ كَفَرۡتُمۡ يَوۡمًا يَّجۡعَلُ الۡوِلۡدَانَ شِيۡبَا  ۖ ﴿73:17﴾ اۨلسَّمَآءُ مُنۡفَطِرٌ ۢ بِهٖؕ كَانَ وَعۡدُهٗ مَفۡعُوۡلًا ﴿73:18﴾

73:1 போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! 73:2 இரவில் எழுந்து தொழுவீராக; ஆனால் கொஞ்ச நேரம்! 73:3 அதாவது, பாதி இரவு அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ 73:4 அல்லது கூடுதலாகவோ (தொழுவீராக!) மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! 73:5 திண்ணமாக, நாம் உம் மீது கன மானதொரு வாக்கை இறக்கப் போகின்றோம். 73:6 உண்மையில், இரவில் எழுந்திருப்பது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது. 73:7 பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன. 73:8 உம் இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து கொண்டிருப்பீராக! மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக! 73:9 அவன் கிழக்கு மேற்குத் திசைகளின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்குப் பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக! 73:10 மேலும், இம்மக்கள் எவற்றையெல்லாம் புனைந்துரைக்கின்றார்களோ அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக! 73:11 பொய்யென வாதிடுபவர்களான இந்த சுகவாசிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவீராக! மேலும், சிறிது காலத்திற்கு இவர்களை இப்படியே விட்டு வைப்பீராக. 73:12 நம்மிடம் (இவர்களுக்காகக்) கனத்த விலங்குகளும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பும், 73:13 தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன. 73:14 இது நடைபெறும் அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும். மேலும், மலைகள் சரிந்து போகும்; மணற்குவியலைப் போன்றாகிவிடும். 73:15 திண்ணமாக, நாம் ஒரு தூதரை, உங்களின் மீது சான்று பகரக்கூடியவராக ஆக்கி உங்களிடம் அனுப்பினோம்; ஃபிர்அவ்னிடம் நாம் ஒரு தூதரை அனுப்பியது போன்று! 73:16 (பிறகு, பார்த்துக் கொள்ளுங்கள்:) ஃபிர்அவ்ன் அந்தத் தூதரின் பேச்சை ஏற்காதபோது, நாம் அவனை மிகவும் கடுமையாகப் பிடித்தோம். 73:17 நீங்கள் நிராகரித்து விட்டால் அந்த நாளில் எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? அதுவோ, குழந்தைகளை நரைக்கச் செய்துவிடும்; 73:18 அதன் கடினத்தால் வானம் வெடித் துத் தகர்ந்து போய்விடும். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீர வேண்டியுள்ளது.

  அத்தியாயம் 73. அல்முஸ்ஸம்மில்   |  முன்  |     வசனம் 1-18 of 20    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-18
 19-20