Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 71. நூஹ்    | முன் |   வசனம்1-20 of 28    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
اِنَّاۤ اَرۡسَلۡنَا نُوۡحًا اِلٰى قَوۡمِهٖۤ اَنۡ اَنۡذِرۡ قَوۡمَكَ مِنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِيَهُمۡ عَذَابٌ اَلِيۡمٌ ﴿71:1﴾ قَالَ يٰقَوۡمِ اِنِّىۡ لَـكُمۡ نَذِيۡرٌ مُّبِيۡنٌۙ ﴿71:2﴾ اَنِ اعۡبُدُوا اللّٰهَ وَاتَّقُوۡهُ وَاَطِيۡعُوۡنِۙ ﴿71:3﴾ يَغۡفِرۡ لَـكُمۡ مِّنۡ ذُنُوۡبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا يُؤَخَّرُۘ لَوۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿71:4﴾ قَالَ رَبِّ اِنِّىۡ دَعَوۡتُ قَوۡمِىۡ لَيۡلًا وَّنَهَارًا ۙ ﴿71:5﴾ فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِىۡۤ اِلَّا فِرَارًا ﴿71:6﴾ وَاِنِّىۡ كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوۡۤا اَصَابِعَهُمۡ فِىۡۤ اٰذَانِهِمۡ وَاسۡتَغۡشَوۡا ثِيَابَهُمۡ وَاَصَرُّوۡا وَاسۡتَكۡبَرُوا اسۡتِكۡبَارًا ۚ ﴿71:7﴾ ثُمَّ اِنِّىۡ دَعَوۡتُهُمۡ جِهَارًا ۙ ﴿71:8﴾ ثُمَّ اِنِّىۡۤ اَعۡلَـنۡتُ لَهُمۡ وَاَسۡرَرۡتُ لَهُمۡ اِسۡرَارًا ۙ ﴿71:9﴾ فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّكُمۡؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ ﴿71:10﴾ يُّرۡسِلِ السَّمَآءَ عَلَيۡكُمۡ مِّدۡرَارًا ۙ ﴿71:11﴾ وَّيُمۡدِدۡكُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِيۡنَ وَيَجۡعَلۡ لَّـكُمۡ جَنّٰتٍ وَّيَجۡعَلۡ لَّـكُمۡ اَنۡهٰرًا ؕ ﴿71:12﴾ مَا لَـكُمۡ لَا تَرۡجُوۡنَ لِلّٰهِ وَقَارًا ۚ ﴿71:13﴾ وَقَدۡ خَلَقَكُمۡ اَطۡوَارًا ﴿71:14﴾ اَلَمۡ تَرَوۡا كَيۡفَ خَلَقَ اللّٰهُ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۙ ﴿71:15﴾ وَّجَعَلَ الۡقَمَرَ فِيۡهِنَّ نُوۡرًا ۙ وَّجَعَلَ الشَّمۡسَ سِرَاجًا ﴿71:16﴾ وَاللّٰهُ اَنۡۢبَتَكُمۡ مِّنَ الۡاَرۡضِ نَبَاتًا ۙ ﴿71:17﴾ ثُمَّ يُعِيۡدُكُمۡ فِيۡهَا وَيُخۡرِجُكُمۡ اِخۡرَاجًا ﴿71:18﴾ وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الۡاَرۡضَ بِسَاطًا ۙ ﴿71:19﴾ لِّـتَسۡلُكُوۡا مِنۡهَا سُبُلًا فِجَاجًا ﴿71:20﴾

71:1 நாம் நூஹை இந்த ஏவுரையுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக! 71:2 அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன். 71:3 (நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்:) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். 71:4 அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே! 71:5 அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன். 71:6 ஆனால், என்னுடைய அழைப்போ விரண்டோடுவதையே அவர்களிடம் அதிகப்படுத்தியது. 71:7 மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள். 71:8 மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன். 71:9 பின் நான் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாகவும் விளக்கினேன். 71:10 நான் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். 71:11 அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். 71:12 செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான். 71:13 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே! 71:14 உண்மையில் அவன் உங்களைப் பல நிலைகளாகப் படைத்திருக்கின்றான். 71:15 அல்லாஹ் எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதையும், 71:16 அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? 71:17 மேலும், அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து வியக்கத்தக்க விதத்தில் முளைக்கச் செய்தான். 71:18 பின்னர், உங்களை இதே பூமிக்குத் திரும்பக் கொண்டு செல்வான். மேலும், அதிலிருந்து திடீரென உங்களை எழுப்பி நிறுத்துவான். 71:19 மேலும், அல்லாஹ் பூமியை உங்களுக்காக விரிப்பாக அமைத்தான்; 71:20 நீங்கள் அதன் திறந்த பாதைகளில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக!

  அத்தியாயம் 71. நூஹ்   |  முன்  |     வசனம் 1-20 of 28    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-20
 21-28