Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 68. அல்கலம்    | முன் |   வசனம்1-33 of 52    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
نٓ وَالۡقَلَمِ وَمَا يَسۡطُرُوۡنَۙ ﴿68:1﴾ مَاۤ اَنۡتَ بِـنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُوۡنٍۚ ﴿68:2﴾ وَاِنَّ لَڪَ لَاَجۡرًا غَيۡرَ مَمۡنُوۡنٍۚ ﴿68:3﴾ وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيۡمٍ ﴿68:4﴾ فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُوۡنَۙ ﴿68:5﴾ بِاَيِّٮكُمُ الۡمَفۡتُوۡنُ ﴿68:6﴾ اِنَّ رَبَّكَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِيۡلِهٖ وَهُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِيۡنَ ﴿68:7﴾ فَلَا تُطِعِ الۡمُكَذِّبِيۡنَ ﴿68:8﴾ وَدُّوۡا لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُوۡنَ ﴿68:9﴾ وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٍ مَّهِيۡنٍۙ ﴿68:10﴾ هَمَّازٍ مَّشَّآءٍۢ بِنَمِيۡمٍۙ ﴿68:11﴾ مَّنَّاعٍ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ اَثِيۡمٍۙ ﴿68:12﴾ عُتُلٍّ ۢ بَعۡدَ ذٰلِكَ زَنِيۡمٍۙ ﴿68:13﴾ اَنۡ كَانَ ذَا مَالٍ وَّبَنِيۡنَؕ ﴿68:14﴾ اِذَا تُتۡلٰى عَلَيۡهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَ ﴿68:15﴾ سَنَسِمُهٗ عَلَى الۡخُـرۡطُوۡمِ ﴿68:16﴾ اِنَّا بَلَوۡنٰهُمۡ كَمَا بَلَوۡنَاۤ اَصۡحٰبَ الۡجَـنَّةِ ۚ اِذۡ اَقۡسَمُوۡا لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِيۡنَۙ ﴿68:17﴾ وَلَا يَسۡتَثۡنُوۡنَ ﴿68:18﴾ فَطَافَ عَلَيۡهَا طَآٮِٕفٌ مِّنۡ رَّبِّكَ وَهُمۡ نَآٮِٕمُوۡنَ ﴿68:19﴾ فَاَصۡبَحَتۡ كَالصَّرِيۡمِۙ ﴿68:20﴾ فَتَـنَادَوۡا مُصۡبِحِيۡنَۙ ﴿68:21﴾ اَنِ اغۡدُوۡا عَلٰى حَرۡثِكُمۡ اِنۡ كُنۡتُمۡ صٰرِمِيۡنَ ﴿68:22﴾ فَانۡطَلَقُوۡا وَهُمۡ يَتَخَافَتُوۡنَۙ ﴿68:23﴾ اَنۡ لَّا يَدۡخُلَنَّهَا الۡيَوۡمَ عَلَيۡكُمۡ مِّسۡكِيۡنٌۙ ﴿68:24﴾ وَّغَدَوۡا عَلٰى حَرۡدٍ قٰدِرِيۡنَ ﴿68:25﴾ فَلَمَّا رَاَوۡهَا قَالُوۡۤا اِنَّا لَـضَآلُّوۡنَۙ ﴿68:26﴾ بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ ﴿68:27﴾ قَالَ اَوۡسَطُهُمۡ اَلَمۡ اَقُلۡ لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُوۡنَ ﴿68:28﴾ قَالُوۡا سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيۡنَ ﴿68:29﴾ فَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰى بَعۡضٍ يَّتَلَاوَمُوۡنَ ﴿68:30﴾ قَالُوۡا يٰوَيۡلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِيۡنَ ﴿68:31﴾ عَسٰى رَبُّنَاۤ اَنۡ يُّبۡدِلَـنَا خَيۡرًا مِّنۡهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوۡنَ ﴿68:32﴾ كَذٰلِكَ الۡعَذَابُؕ وَلَعَذَابُ الۡاٰخِرَةِ اَكۡبَرُ ۘ لَوۡ كَانُوۡا يَعۡلَمُوۡنَ  ﴿68:33﴾

68:1 நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக! 68:2 நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர். 68:3 என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது. 68:4 மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர். 68:5 விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள். 68:6 உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும் 68:7 அவன் வழியிலிருந்து பிறழ்ந்தவர்கள் யாரென்பதையும் உமதிறைவன் நன்கு அறிகின்றான்; நேர்வழியில் இருப்பவர்களையும் நன்கு அறிகின்றான். 68:8 எனவே சத்தியத்தைப் பொய்ப்படுத்துகின்ற இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீர் பணிந்து விடாதீர். 68:9 நீர் சிறிது விட்டுக் கொடுத்து இணங்கி வந்தால், அவர்களும் சற்று விட்டுக்கொடுத்து இணங்கி வரலாம் என விரும்புகின்றார்கள். 68:10 அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். 68:11 அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும், 68:12 நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும், 68:13 கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்; 68:14 அவனுக்கு நிறைய செல்வமும் பிள்ளைகளும் இருக்கின்றன என்பதால்! 68:15 நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காட்டப்படும்போது, இவை முற்காலத்துக் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான். 68:16 விரைவில் நாம் இவனுடைய மூக்கின் மீது சூடு இடுவோம்! 68:17 நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள். 68:18 அதில் எவ்வித விதிவிலக்கையும் அவர்கள் குறிப்பிடவில்லை. 68:19 இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உம் இறைவனின் தரப்பிலிருந்து ஒரு பேரிடர் அந்தத் தோட்டத்தைப் பிடித்துக் கொண்டது. 68:20 அப்போது அது அறுவடை செய்யப்பட்ட வயலைப் போன்று ஆகிவிட்டது! 68:21 காலையில் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கூறினார்கள், 68:22 “நீங்கள் கனிகளைப் பறிப்பதாக இருந்தால், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுங்கள்” என்று! 68:23 அவ்வாறே அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்: தங்களிடையே இரகசியம் பேசிக்கொண்டு. 68:24 “இன்று எந்த ஏழை எளியவனும் உங்களிடம் தோட்டத்திற்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!” 68:25 அப்படி எதையும் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்து அதிகாலையில் (கனிகளைப் பறிக்க) ஆற்றலுள்ளவர்கள் போன்று அவசர அவசரமாக அவர்கள் அங்கு சென்றார்கள்: 68:26 ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்; 68:27 இல்லை, உண்மையில் நாம் இழப்புக்குள்ளாகிவிட்டோம்!” 68:28 அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?” 68:29 அப்போது அவர்கள் கூறினார்கள்: “மிகத் தூய்மையானவன், எங்கள் அதிபதி! உண்மையில் நாம் தாம் பாவிகளாயிருந்தோம்!” 68:30 பின்னர் அவர்கள் பரஸ்பரம் பழித்துரைக்கலாயினர். 68:31 இறுதியில் அவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய கேடே! ஐயமின்றி நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விட்டோம். 68:32 எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!” 68:33 இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே!

  அத்தியாயம் 68. அல்கலம்   |  முன்  |     வசனம் 1-33 of 52    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-33
 34-52