Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 58. அல்முஜாதலா    | முன் |   வசனம்1-6 of 22    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
قَدۡ سَمِعَ اللّٰهُ قَوۡلَ الَّتِىۡ تُجَادِلُكَ فِىۡ زَوۡجِهَا وَ تَشۡتَكِىۡۤ اِلَى اللّٰهِ ۖ وَاللّٰهُ يَسۡمَعُ تَحَاوُرَكُمَا ؕ اِنَّ اللّٰهَ سَمِيۡعٌ ۢ بَصِيۡرٌ ﴿58:1﴾ اَلَّذِيۡنَ يُظٰهِرُوۡنَ مِنۡكُمۡ مِّنۡ نِّسَآٮِٕهِمۡ مَّا هُنَّ اُمَّهٰتِهِمۡؕ اِنۡ اُمَّهٰتُهُمۡ اِلَّا الّٰٓـىِٔۡ وَلَدۡنَهُمۡؕ وَاِنَّهُمۡ لَيَقُوۡلُوۡنَ مُنۡكَرًا مِّنَ الۡقَوۡلِ وَزُوۡرًاؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوۡرٌ ﴿58:2﴾ وَالَّذِيۡنَ يُظٰهِرُوۡنَ مِنۡ نِّسَآٮِٕهِمۡ ثُمَّ يَعُوۡدُوۡنَ لِمَا قَالُوۡا فَتَحۡرِيۡرُ رَقَبَةٍ مِّنۡ قَبۡلِ اَنۡ يَّتَمَآسَّا ؕ ذٰ لِكُمۡ تُوۡعَظُوۡنَ بِهٖ ؕ وَاللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِيۡرٌ ﴿58:3﴾ فَمَنۡ لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِنۡ قَبۡلِ اَنۡ يَّتَمَآسَّاؕ فَمَنۡ لَّمۡ يَسۡتَطِعۡ فَاِطۡعَامُ سِتِّيۡنَ مِسۡكِيۡنًاؕ ذٰلِكَ لِتُؤۡمِنُوۡا بِاللّٰهِ وَرَسُوۡلِهٖؕ وَتِلۡكَ حُدُوۡدُ اللّٰهِؕ وَلِلۡكٰفِرِيۡنَ عَذَابٌ اَلِیْمٌ ﴿58:4﴾ اِنَّ الَّذِيۡنَ يُحَآدُّوۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗ كُبِتُوۡا كَمَا كُبِتَ الَّذِيۡنَ مِنۡ قَبۡلِهِمۡ وَقَدۡ اَنۡزَلۡنَاۤ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ ؕ وَ لِلۡكٰفِرِيۡنَ عَذَابٌ مُّهِيۡنٌ ۚ ﴿58:5﴾ يَوۡمَ يَبۡعَثُهُمُ اللّٰهُ جَمِيۡعًا فَيُنَبِّئُهُمۡ بِمَا عَمِلُوۡا ؕ اَحۡصٰٮهُ اللّٰهُ وَنَسُوۡهُ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌ ﴿58:6﴾

58:1 தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும், அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். உங்கள் இருவரின் உரையாடலை அல்லாஹ் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான். 58:2 உங்களில் எவர்கள் தம்முடைய மனைவியரை ‘ளிஹார்’* செய்கின்றார்களோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகிவிடமாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவர்களே அவர்களின் அன்னையர் ஆவர். அவர்கள் கடும் வெறுப்புக்குரிய, பொய்யான சொல்லைக் கூறுகின்றார்கள். மேலும், உண்மை யாதெனில், அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 58:3 எவர்கள் தங்களுடைய மனைவியரை ‘ளிஹார்’ செய்து பின்னர், தாங்கள் கூறிய சொல்லைவிட்டுத் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தீண்டும் முன்பாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு உங்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. மேலும், நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். 58:4 இனி, எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லையானால், அவ்விருவரும் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கும் சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகின்றது என்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்! இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும், நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது. 58:5 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்; அவர்களுக்கு முன்பிருந்தவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்பட்டதைப் போன்று! நாம் தெள்ளத் தெளிவான சான்றுகளை இறக்கிவிட்டோம். இனி, நிராகரிப்பவர்களுக்கு இழிவுமிக்க வேதனை இருக்கின்றது. 58:6 அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி, அவர்கள் என்னவெல்லாம் செய்துவிட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நாளில் (இந்த இழிவுமிக்க வேதனை கிட்டும்.) அவர்கள் மறந்து போய்விட்டனர். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் எண்ணி எண்ணி பாதுகாத்து வைத்திருக்கின்றான். மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாகவும் இருக்கின்றான்.

  அத்தியாயம் 58. அல்முஜாதலா   |  முன்  |     வசனம் 1-6 of 22    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-6
 7-13
 14-22