Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 56. அல்வாகிஆ    | முன் |   வசனம்1-38 of 96    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
اِذَا وَقَعَتِ الۡوَاقِعَةُ ۙ ﴿56:1﴾ لَيۡسَ لِـوَقۡعَتِهَا كَاذِبَةٌ ۘ ﴿56:2﴾ خَافِضَةٌ رَّافِعَةٌ ۙ ﴿56:3﴾ اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ ﴿56:4﴾ وَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ ﴿56:5﴾ فَكَانَتۡ هَبَآءً مُّنۡۢبَـثًّا ۙ ﴿56:6﴾ وَّكُنۡـتُمۡ اَزۡوَاجًا ثَلٰـثَـةً ؕ ﴿56:7﴾ فَاَصۡحٰبُ الۡمَيۡمَنَةِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَيۡمَنَةِ ؕ ﴿56:8﴾ وَاَصۡحٰبُ الۡمَشۡـَٔـمَةِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔـمَةِؕ ﴿56:9﴾ وَالسّٰبِقُوۡنَ السّٰبِقُوۡنَۚ  ۙ ﴿56:10﴾ اُولٰٓٮِٕكَ الۡمُقَرَّبُوۡنَۚ ﴿56:11﴾ فِىۡ جَنّٰتِ النَّعِيۡمِ ﴿56:12﴾ ثُلَّةٌ مِّنَ الۡاَوَّلِيۡنَۙ ﴿56:13﴾ وَقَلِيۡلٌ مِّنَ الۡاٰخِرِيۡنَؕ ﴿56:14﴾ عَلٰى سُرُرٍ مَّوۡضُوۡنَةٍۙ ﴿56:15﴾ مُّتَّكِـــِٕيۡنَ عَلَيۡهَا مُتَقٰبِلِيۡنَ ﴿56:16﴾ يَطُوۡفُ عَلَيۡهِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَۙ ﴿56:17﴾ بِاَكۡوَابٍ وَّاَبَارِيۡقَ ۙ وَكَاۡسٍ مِّنۡ مَّعِيۡنٍۙ ﴿56:18﴾ لَّا يُصَدَّعُوۡنَ عَنۡهَا وَلَا يُنۡزِفُوۡنَۙ ﴿56:19﴾ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُوۡنَۙ ﴿56:20﴾ وَلَحۡمِ طَيۡرٍ مِّمَّا يَشۡتَهُوۡنَؕ ﴿56:21﴾ وَحُوۡرٌ عِيۡنٌۙ ﴿56:22﴾ كَاَمۡثَالِ اللُّـؤۡلُـوٴِالۡمَكۡنُوۡنِۚ ﴿56:23﴾ جَزَآءًۢ بِمَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ ﴿56:24﴾ لَا يَسۡمَعُوۡنَ فِيۡهَا لَغۡوًا وَّلَا تَاۡثِيۡمًا ۙ ﴿56:25﴾ اِلَّا قِيۡلًا سَلٰمًا سَلٰمًا ﴿56:26﴾ وَاَصۡحٰبُ الۡيَمِيۡنِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡيَمِيۡنِؕ ﴿56:27﴾ فِىۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍۙ ﴿56:28﴾ وَّطَلۡحٍ مَّنۡضُوۡدٍۙ ﴿56:29﴾ وَّظِلٍّ مَّمۡدُوۡدٍۙ ﴿56:30﴾ وَّ مَآءٍ مَّسۡكُوۡبٍۙ ﴿56:31﴾ وَّفَاكِهَةٍ كَثِيۡرَةٍۙ ﴿56:32﴾ لَّا مَقۡطُوۡعَةٍ وَّلَا مَمۡنُوۡعَةٍۙ ﴿56:33﴾ وَّ فُرُشٍ مَّرۡفُوۡعَةٍؕ ﴿56:34﴾ اِنَّاۤ اَنۡشَاۡنٰهُنَّ اِنۡشَآءًۙ ﴿56:35﴾ فَجَعَلۡنٰهُنَّ اَبۡكَارًاۙ ﴿56:36﴾ عُرُبًا اَتۡرَابًاۙ ﴿56:37﴾ لِّاَصۡحٰبِ الۡيَمِيۡنِؕ ﴿56:38﴾

56:1 நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது, 56:2 அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார். 56:3 அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும். 56:4 அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும். 56:5 மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு ; 56:6 பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்! 56:7 அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள். 56:8 வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது! 56:9 மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது! 56:10 மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே! 56:11 அவர்கள்தாம் நெருக்கமானவர்கள். 56:12 அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள். 56:13 முன்னோரில் நிறையப் பேரும் 56:14 பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள். 56:15 தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில் 56:16 எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள். 56:17 அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள் 56:18 மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள். 56:19 அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது. 56:20 அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்; 56:21 மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள். 56:22 மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்; 56:23 அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள். 56:24 இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும். 56:25 அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள். 56:26 எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும். 56:27 மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது? 56:28 அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள், 56:29 மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்; 56:30 பரந்து விரிந்திருக்கும் நிழல், 56:31 எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர், 56:32 என்றைக்கும் தீர்ந்துவிடாத 56:33 தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ; 56:34 மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள். 56:35 அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம். 56:36 மேலும், அவர்களைக் கன்னிகளாகவும், 56:37 தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம். 56:38 இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை.

  அத்தியாயம் 56. அல்வாகிஆ   |  முன்  |     வசனம் 1-38 of 96    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-38
 39-74
 75-96