Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 52. அத்தூர்    | முன் |   வசனம்1-27 of 49    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
وَالطُّوۡرِۙ ﴿52:1﴾ وَكِتٰبٍ مَّسۡطُوۡرٍۙ ﴿52:2﴾ فِىۡ رَقٍّ مَّنۡشُوۡرٍۙ ﴿52:3﴾ وَالۡبَيۡتِ الۡمَعۡمُوۡرِۙ ﴿52:4﴾ وَالسَّقۡفِ الۡمَرۡفُوۡعِۙ ﴿52:5﴾ وَالۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِۙ ﴿52:6﴾ اِنَّ عَذَابَ رَبِّكَ لوَاقِعٌ ۙ ﴿52:7﴾ مَّا لَهٗ مِنۡ دَافِعٍۙ ﴿52:8﴾ يَّوۡمَ تَمُوۡرُ السَّمَآءُ مَوۡرًا ۙ ﴿52:9﴾ وَّتَسِيۡرُ الۡجِبَالُ سَيۡرًا ؕ ﴿52:10﴾ فَوَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّـلۡمُكَذِّبِيۡنَۙ ﴿52:11﴾ الَّذِيۡنَ هُمۡ فِىۡ خَوۡضٍ يَّلۡعَبُوۡنَۘ ﴿52:12﴾ يَوۡمَ يُدَعُّوۡنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاؕ ﴿52:13﴾ هٰذِهِ النَّارُ الَّتِىۡ كُنۡتُمۡ بِهَا تُكَذِّبُوۡنَ ﴿52:14﴾ اَفَسِحۡرٌ هٰذَاۤ اَمۡ اَنۡتُمۡ لَا تُبۡصِرُوۡنَۚ ﴿52:15﴾ اِصۡلَوۡهَا فَاصۡبِرُوۡۤا اَوۡ لَا تَصۡبِرُوۡاۚ سَوَآءٌ عَلَيۡكُمۡؕ اِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿52:16﴾ اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ جَنّٰتٍ وَّنَعِيۡمٍۙ ﴿52:17﴾ فٰكِهِيۡنَ بِمَاۤ اٰتٰٮهُمۡ رَبُّهُمۡۚ وَوَقٰٮهُمۡ رَبُّهُمۡ عَذَابَ الۡجَحِيۡمِ  ﴿52:18﴾ كُلُوۡا وَاشۡرَبُوۡا هَـنِٓـيـْئًا ۢ بِمَا كُنۡـتُمۡ تَعۡمَلُوۡنَۙ ﴿52:19﴾ مُتَّكِـــِٕيۡنَ عَلٰى سُرُرٍ مَّصۡفُوۡفَةٍ ۚ وَزَوَّجۡنٰهُمۡ بِحُوۡرٍ عِيۡنٍ  ﴿52:20﴾ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَاتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُمۡ بِاِيۡمَانٍ اَلۡحَـقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَاۤ اَلَـتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَىۡءٍؕ كُلُّ امۡرِیءٍۢ بِمَا كَسَبَ رَهِيۡنٌ ﴿52:21﴾ وَاَمۡدَدۡنٰهُمۡ بِفَاكِهَةٍ وَّلَحۡمٍ مِّمَّا يَشۡتَهُوۡنَ ﴿52:22﴾ يَـتَـنَازَعُوۡنَ فِيۡهَا كَاۡسًا لَّا لَغۡوٌ فِيۡهَا وَلَا تَاۡثِيۡمٌ ﴿52:23﴾ وَيَطُوۡفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٌ لَّهُمۡ كَاَنَّهُمۡ لُـؤۡلُـؤٌ مَّكۡنُوۡنٌ  ﴿52:24﴾ وَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰى بَعۡضٍ يَّتَسَآءَلُوۡنَ ﴿52:25﴾ قَالُـوۡۤا اِنَّا كُـنَّا قَبۡلُ فِىۡۤ اَهۡلِنَا مُشۡفِقِيۡنَ ﴿52:26﴾ فَمَنَّ اللّٰهُ عَلَيۡنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوۡمِ ﴿52:27﴾

52:1 தூர் மலையின் மீது சத்தியமாக! 52:2 மெல்லிய தோலில் எழுதப்பட்ட 52:3 திறந்த புத்தகத்தின் மீது சத்தியமாக! 52:4 மக்கள் நடமாட்டமுள்ள இல்லத்தின்மீது சத்தியமாக! 52:5 உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக! 52:6 அலைபுரளும் கடலின் மீது சத்தியமாக! 52:7 உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும். 52:8 அதனைத் தடுப்பவர் எவருமிலர். 52:9 அது நிகழும் நாளில் வானம் கடுமையாக நடுங்கும்; 52:10 மலைகள் பறந்து கொண்டிருக்கும். 52:11 கேடுதான் இருக்கிறது அந்நாளில், பொய் என்று தூற்றியவர்களுக்கு! 52:12 அவர்களோ இன்று வீண் வாதங்களில் விளையாட்டாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 52:13 எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்; 52:14 அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள். 52:15 இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா? 52:16 இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.” 52:17 இறையச்சமுள்ளவர்கள் அங்கு சுவனங்களிலும் அருட்பேறுகளிலும் இருப்பார்கள். 52:18 அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான். 52:19 (அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!” 52:20 எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம். 52:21 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான். 52:22 மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம். 52:23 அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது. 52:24 அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள். 52:25 மேலும், அவர்கள் (உலகில் நடந்த) நிலைமைகளைக் குறித்து பரஸ்பரம் விசாரிப்பார்கள். 52:26 அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் முன்பு எங்கள் குடும்பத்தாரிடையே அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வந்தோம். 52:27 இறுதியில், அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்தான்; மேலும், பொசுக்கிவிடும் காற்றின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டான்.

  அத்தியாயம் 52. அத்தூர்   |  முன்  |     வசனம் 1-27 of 49    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-27
 28-49