Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 51. அஸ்ஸாரியாத்    | முன் |   வசனம்1-23 of 60    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
وَالذّٰرِيٰتِ ذَرۡوًا ۙ ﴿51:1﴾ فَالۡحٰمِلٰتِ وِقۡرًا ۙ ﴿51:2﴾ فَالۡجٰرِيٰتِ يُسۡرًا ۙ ﴿51:3﴾ فَالۡمُقَسِّمٰتِ اَمۡرًا ۙ ﴿51:4﴾ اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَصَادِقٌ ۙ ﴿51:5﴾ وَّاِنَّ الدِّيۡنَ لوَاقِعٌ ؕ ﴿51:6﴾ وَالسَّمَآءِ ذَاتِ الۡحُـبُكِ ۙ ﴿51:7﴾ اِنَّـكُمۡ لَفِىۡ قَوۡلٍ مُّخۡتَلِفٍ ۙ ﴿51:8﴾ يُّـؤۡفَكُ عَنۡهُ مَنۡ اُفِكَ ؕ ﴿51:9﴾ قُتِلَ الۡخَـرّٰصُوۡنَۙ ﴿51:10﴾ الَّذِيۡنَ هُمۡ فِىۡ غَمۡرَةٍ سَاهُوۡنَۙ ﴿51:11﴾ يَسۡـَٔــلُوۡنَ اَيَّانَ يَوۡمُ الدِّيۡنِؕ ﴿51:12﴾ يَوۡمَ هُمۡ عَلَى النَّارِ يُفۡتَنُوۡنَ ﴿51:13﴾ ذُوۡقُوۡا فِتۡنَتَكُمۡؕ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تَسۡتَعۡجِلُوۡنَ ﴿51:14﴾ اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙ ﴿51:15﴾ اٰخِذِيۡنَ مَاۤ اٰتٰٮهُمۡ رَبُّهُمۡؕ اِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰلِكَ مُحۡسِنِيۡنَؕ  ﴿51:16﴾ كَانُوۡا قَلِيۡلًا مِّنَ الَّيۡلِ مَا يَهۡجَعُوۡنَ ﴿51:17﴾ وَبِالۡاَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُوۡنَ ﴿51:18﴾ وَفِىۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ لِّلسَّآٮِٕلِ وَالۡمَحۡرُوۡمِ ﴿51:19﴾ وَفِى الۡاَرۡضِ اٰيٰتٌ لِّلۡمُوۡقِنِيۡنَۙ ﴿51:20﴾ وَفِىۡۤ اَنۡفُسِكُمۡؕ اَفَلَا تُبۡصِرُوۡنَ ﴿51:21﴾ وَفِى السَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوۡعَدُوۡنَ ﴿51:22﴾ فَوَرَبِّ السَّمَآءِ وَالۡاَرۡضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثۡلَ مَاۤ اَنَّكُمۡ تَنۡطِقُوۡنَ ﴿51:23﴾

51:1 புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு, 51:2 நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய, 51:3 மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய, 51:4 பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக! 51:5 எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே! 51:6 மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே! 51:7 பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக! 51:8 (மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது. 51:9 எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான். 51:10 அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்! 51:11 அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள். 51:12 “கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர். 51:13 இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும். 51:14 (அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.” 51:15 இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். 51:16 அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள். 51:17 இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும் 51:18 பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள். 51:19 மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்! 51:20 உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன. 51:21 ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன? 51:22 வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்! 51:23 வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.

  அத்தியாயம் 51. அஸ்ஸாரியாத்   |  முன்  |     வசனம் 1-23 of 60    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-23
 24-46
 47-60