Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 50. காஃப்    | முன் |   வசனம்1-15 of 45    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
قٓ ۚ وَالۡقُرۡاٰنِ الۡمَجِيۡدِۚ ﴿50:1﴾ بَلۡ عَجِبُوۡۤا اَنۡ جَآءَهُمۡ مُّنۡذِرٌ مِّنۡهُمۡ فَقَالَ الۡكٰفِرُوۡنَ هٰذَا شَىۡءٌ عَجِيۡبٌۚ ﴿50:2﴾ ءَاِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابًا ۚ ذٰ لِكَ رَجۡعٌ ۢ بَعِيۡدٌ ﴿50:3﴾ قَدۡ عَلِمۡنَا مَا تَنۡقُصُ الۡاَرۡضُ مِنۡهُمۡۚ وَعِنۡدَنَا كِتٰبٌ حَفِيۡظٌ  ﴿50:4﴾ بَلۡ كَذَّبُوۡا بِالۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَهُمۡ فِىۡۤ اَمۡرٍ مَّرِيۡجٍ  ﴿50:5﴾ اَ فَلَمۡ يَنۡظُرُوۡۤا اِلَى السَّمَآءِ فَوۡقَهُمۡ كَيۡفَ بَنَيۡنٰهَا وَزَ يَّـنّٰهَا وَمَا لَهَا مِنۡ فُرُوۡجٍ ﴿50:6﴾ وَالۡاَرۡضَ مَدَدۡنٰهَا وَاَ لۡقَيۡنَا فِيۡهَا رَوَاسِىَ وَاَنۡۢبَتۡنَا فِيۡهَا مِنۡ كُلِّ زَوۡجٍۢ بَهِيۡجٍ ۙ ﴿50:7﴾ تَبۡصِرَةً وَّذِكۡرٰى لِكُلِّ عَبۡدٍ مُّنِيۡبٍ ﴿50:8﴾ وَنَزَّلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنۡۢبَـتۡـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الۡحَصِيۡدِ ۙ ﴿50:9﴾ وَالنَّخۡلَ بٰسِقٰتٍ لَّهَا طَلۡـعٌ نَّضِيۡدٌ ۙ ﴿50:10﴾ رِّزۡقًا لِّلۡعِبَادِ ۙ وَاَحۡيَيۡنَا بِهٖ بَلۡدَةً مَّيۡـتًا ؕ كَذٰلِكَ الۡخُـرُوۡجُ ﴿50:11﴾ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّاَصۡحٰبُ الرَّسِّ وَثَمُوۡدُۙ ﴿50:12﴾ وَعَادٌ وَّفِرۡعَوۡنُ وَاِخۡوَانُ لُوۡطٍۙ ﴿50:13﴾ وَّاَصۡحٰبُ الۡاَيۡكَةِ وَقَوۡمُ تُبَّعٍؕ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيۡدِ ﴿50:14﴾ اَفَعَيِيۡنَا بِالۡخَـلۡقِ الۡاَوَّلِؕ بَلۡ هُمۡ فِىۡ لَبۡسٍ مِّنۡ خَلۡقٍ جَدِيۡدٍ ﴿50:15﴾

50:1 காஃப் மாட்சிமை மிக்க குர்ஆனின் மீது ஆணையாக! 50:2 உண்மை யாதெனில், இவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் இவர்களிலிருந்தே வந்திருப்பது பற்றி இவர்கள் வியப்படைந்துள்ளார்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் கூறத் தொடங்கினார்கள்: “இது வியப்புக்குரிய விஷயம்தான்! 50:3 நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) மீண்டும் எழுப்பப்படுவது எனும் இவ்விஷயம் அறிவுக்குப் புறம்பானதாகும்.” 50:4 (உண்மை யாதெனில்) பூமி, இவர்களின் உடம்பிலிருந்து எவற்றைத் தின்கிறது என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்துள்ளோம். மேலும், அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது. 50:5 ஆயினும், சத்தியம் இவர்களிடம் வந்தபோது அதனை இவர்கள் வெளிப்படையாகப் பொய்யெனக் கூறிவிட்டார்கள். இதனால்தான் இப்போது இவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். 50:6 சரி, இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை எப்பொழுதுமே பார்த்ததில்லையா, என்ன? அதனை நாம் எவ்வாறு அமைத்துள்ளோம்; எவ்வாறு அலங்கரித்துள்ளோம் என்று! அதில் எங்கும் எந்த ஒரு பிளவும் இல்லை. 50:7 மேலும், பூமியை நாம் விரித்தோம். இன்னும் அதில் மலைகளை நாட்டினோம். மேலும், எல்லாவிதமான அழகிய தோற்றமுடைய தாவரங்களையும் முளைக்கச் செய்தோம். 50:8 மேலும், இவை அனைத்தும் (சத்தியத்தின் பக்கம்) திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அகப்பார்வையையும் படிப்பினையையும் வழங்கக்கூடியதாய் இருக்கின்றன. 50:9 மேலும், நாம் வானத்திலிருந்து அருள்மிக்க நீரினை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும், 50:10 கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். 50:11 இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். (இறந்துவிட்ட மனிதர்கள் பூமியிலிருந்து) வெளிப்படுவதும் இவ்விதமேயாகும். 50:12 இவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமூகத்தினரும், ‘ரஸ்ஸு’ வாசிகளும், ஸமூத் கூட்டத்தார்களும், 50:13 மற்றும் ஆத் கூட்டத்தார்களும், ஃபிர்அவ்னும், லூத்தின் சகோதரர்களும் 50:14 மற்றும் ‘அய்கா’ வாசிகள், ‘துப்பஃவு’ சமுதாயத்தார் ஆகிய யாவரும் பொய்யெனத் தூற்றிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், எனது எச்சரிக்கை அவர்களின் மீது உண்மையாகிவிட்டது. 50:15 முதல் முறையாய்ப் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாயிருந்தோமா, என்ன? ஆனால், மீண்டும் புதிதாய்ப் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றார்கள்.

  அத்தியாயம் 50. காஃப்   |  முன்  |     வசனம் 1-15 of 45    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-15
 16-29
 30-45