Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 46. அல்அஹ்காஃப்    | முன் |   வசனம்1-10 of 35    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
حٰمٓ ﴿46:1﴾ تَنۡزِيۡلُ الۡكِتٰبِ مِنَ اللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَكِيۡمِ ﴿46:2﴾ مَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَاَجَلٍ مُّسَمًّىؕ وَالَّذِيۡنَ كَفَرُوۡا عَمَّاۤ اُنۡذِرُوۡا مُعۡرِضُوۡنَ ﴿46:3﴾ قُلۡ اَرَءَيۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ اَرُوۡنِىۡ مَاذَا خَلَقُوۡا مِنَ الۡاَرۡضِ اَمۡ لَهُمۡ شِرۡكٌ فِى السَّمٰوٰتِؕ اِیْتُوۡنِىۡ بِكِتٰبٍ مِّنۡ قَبۡلِ هٰذَاۤ اَوۡ اَثٰرَةٍ مِّنۡ عِلۡمٍ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ ﴿46:4﴾ وَمَنۡ اَضَلُّ مِمَّنۡ يَّدۡعُوۡا مِنۡ دُوۡنِ اللّٰهِ مَنۡ لَّا يَسۡتَجِيۡبُ لَهٗۤ اِلٰى يَوۡمِ الۡقِيٰمَةِ وَهُمۡ عَنۡ دُعَآٮِٕهِمۡ غٰفِلُوۡنَ ﴿46:5﴾ وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوۡا لَهُمۡ اَعۡدَآءً وَّ كَانُوۡا بِعِبَادَتِهِمۡ كٰفِرِيۡنَ ﴿46:6﴾ وَاِذَا تُتۡلٰى عَلَيۡهِمۡ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيۡنَ كَفَرُوۡا لِلۡحَقِّ لَـمَّا جَآءَهُمۡۙ هٰذَا سِحۡرٌ مُّبِيۡنٌؕ ﴿46:7﴾ اَمۡ يَقُوۡلُوۡنَ افۡتَـرٰٮهُؕ قُلۡ اِنِ افۡتَـرَيۡتُهٗ فَلَا تَمۡلِكُوۡنَ لِىۡ مِنَ اللّٰهِ شَيـــًٔا ؕ هُوَ اَعۡلَمُ بِمَا تُفِيۡضُوۡنَ فِيۡهِؕ كَفٰى بِهٖ شَهِيۡدًاۢ بَيۡنِىۡ وَبَيۡنَكُمۡ ؕ وَهُوَ الۡغَفُوۡرُ الرَّحِيۡمُ ﴿46:8﴾ قُلۡ مَا كُنۡتُ بِدۡعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدۡرِىۡ مَا يُفۡعَلُ بِىۡ وَلَا بِكُمۡؕ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا يُوۡحٰٓى اِلَىَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِيۡرٌ مُّبِيۡنٌ ﴿46:9﴾ قُلۡ اَرَءَيۡتُمۡ اِنۡ كَانَ مِنۡ عِنۡدِ اللّٰهِ وَكَفَرۡتُمۡ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنۡۢ بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ عَلٰى مِثۡلِهٖ فَاٰمَنَ وَاسۡتَكۡبَرۡتُمۡ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهۡدِى الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَ ﴿46:10﴾

46:1 ஹாமீம். 46:2 இந்த வேதம், வல்லமை மிக்கோனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டதாகும். 46:3 நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம். ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள். 46:4 (நபியே! இவர்களிடம்) கூறும்: இறைவனை விட்டுவிட்டு எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவை எப்படிப்பட்டவை என்று நீங்கள் எப்போதாவது கண்களைத் திறந்து பார்த்ததுண்டா? சற்று எனக்குக் காண்பித்துத் தாருங்கள். அவர்கள் பூமியில் எதையாவது படைத்திருக்கின்றார்களா? அல்லது வானங்களைப் படைத்து நிர்வகிப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், இதற்கு முன் வந்த ஏதேனும் வேதமோ அல்லது எஞ்சியுள்ள ஏதேனும் ஞானமோ (இந்தக் கொள்கைகளுக்கு ஆதாரமாக) உங்களிடம் இருப்பின் அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள். 46:5 பிறகு இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழிதவறியவன் யார் இருக்க முடியும்? அவன் அல்லாஹ்வை விடுத்து, மறுமைநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைக்கின்றான். அதுமட்டுமல்ல, அழைப்பவர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள். 46:6 மேலும், மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும்போது தங்களை அழைத்தவர்களுக்கு அவர்கள் பகைவர்களாயும் ஆகிவிடுவார்கள்; மேலும், அவர்களின் வழிபாட்டை நிராகரிப்பவர்களாயும் இருப்பார்கள். 46:7 நம்முடைய தெளிவான வசனங்கள் இம்மக்களிடம் ஓதிக்காட்டப்பட்டு, சத்தியம் இவர்கள் முன் வந்துவிட்டபோது இந்நிராகரிப்பாளர்கள் சத்தியத்தைக் குறித்து “இது வெளிப்படையான சூனியம்” என்று கூறுகின்றார்கள். 46:8 என்ன, இவர்கள் “இறைத்தூதர் இதனைச் சுயமாகப் புனைந்துள்ளார்!” என்று கூறுகின்றார்களா? இவர்களிடம் கூறும்: “இதனை நான் சுயமாகப் புனைந்து கூறுகிறேன் எனில், இறைவனின் பிடியிலிருந்து சிறிதும் என்னை உங்களால் காப்பாற்ற முடியாது! நீங்கள் இட்டுக்கட்டும் பேச்சுக்களை அவன் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான். எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சியம் அளிப்பதற்கு அவனே போதுமானவன். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 46:9 இவர்களிடம் கூறும்: “இறைத்தூதர்களில் நான் ஒன்றும் புதுமையானவன் அல்லன். மேலும் (நாளை) எனக்கு என்ன நேரும் என்பதையும், உங்களுக்கு என்ன நேரும் என்பதையும் நான் அறியேன். என்னிடம் அனுப்பப்படும் வஹியைத்தான்* நான் பின்பற்றுகின்றேன். நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறல்லன்.” 46:10 (நபியே இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எப்போதேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாய் இருந்து, அதனை நீங்கள் நிராகரிக்கின்றீர்களெனில், (உங்கள் கதி என்னவாகும் என்று!) மேலும், இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்து சான்றுபகர்பவர் ஒருவர் இதுபோன்ற வேதத்தின் மீது சான்று பகர்ந்துள்ளார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்; ஆனால், நீங்கள் உங்களின் ஆணவத்திலேயே உழன்று கொண்டு இருந்தீர்கள். இத்தகைய கொடுமைக்காரர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை!”

  அத்தியாயம் 46. அல்அஹ்காஃப்   |  முன்  |     வசனம் 1-10 of 35    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-10
 11-20
 21-26
 27-35