Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 45. அல் ஜாஸியா     | முன் |   வசனம்1-11 of 37    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
حٰمٓ ۚ ﴿45:1﴾ تَنۡزِيۡلُ الۡكِتٰبِ مِنَ اللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَكِيۡمِ ﴿45:2﴾ اِنَّ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَاٰيٰتٍ لِّلۡمُؤۡمِنِيۡنَؕ ﴿45:3﴾ وَفِىۡ خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِنۡ دَآبَّةٍ اٰيٰتٌ لِّقَوۡمٍ يُّوۡقِنُوۡنَۙ  ﴿45:4﴾ وَاخۡتِلَافِ الَّيۡلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنۡزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنۡ رِّزۡقٍ فَاَحۡيَا بِهِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَ تَصۡرِيۡفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوۡمٍ يَّعۡقِلُوۡنَ ﴿45:5﴾ تِلۡكَ اٰيٰتُ اللّٰهِ نَـتۡلُوۡهَا عَلَيۡكَ بِالۡحَقِّ ۚ فَبِاَىِّ حَدِيۡثٍۢ بَعۡدَ اللّٰهِ وَاٰيٰتِهٖ يُؤۡمِنُوۡنَ ﴿45:6﴾ وَيۡلٌ لِّـكُلِّ اَفَّاكٍ اَثِيۡمٍۙ ﴿45:7﴾ يَّسۡمَعُ اٰيٰتِ اللّٰهِ تُتۡلٰى عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرًا كَاَنۡ لَّمۡ يَسۡمَعۡهَا ۚ فَبَشِّرۡهُ بِعَذَابٍ اَ لِيۡمٍ ﴿45:8﴾ وَاِذَا عَلِمَ مِنۡ اٰيٰتِنَا شَيۡــًٔـا اۨتَّخَذَهَا هُزُوًا ؕ اُولٰٓٮِٕكَ لَهُمۡ عَذَابٌ مُّهِيۡنٌ ؕ ﴿45:9﴾ مِنۡ وَّرَآٮِٕهِمۡ جَهَنَّمُۚ وَلَا يُغۡنِىۡ عَنۡهُمۡ مَّا كَسَبُوۡا شَيۡــًٔـا وَّلَا مَا اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰهِ اَوۡلِيَآءَ ۚ وَلَهُمۡ عَذَابٌ عَظِيۡمٌؕ  ﴿45:10﴾ هٰذَا هُدًى ۚ وَالَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٌ مِّنۡ رِّجۡزٍ اَلِيۡمٌ ﴿45:11﴾

45:1 ஹாமீம். 45:2 இந்த வேதம், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். 45:3 உண்மை யாதெனில், இறைநம்பிக்கையுள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. 45:4 மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன. 45:5 இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன. 45:6 இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்? 45:7 பொய்யனாகவும் கெட்டவனாகவும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவுதான். 45:8 அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும். 45:9 நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது. 45:10 அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது. 45:11 இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது.

  அத்தியாயம் 45. அல் ஜாஸியா    |  முன்  |     வசனம் 1-11 of 37    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-11
 12-21
 22-26
 27-37