Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 38. ஸாத்    | முன் |   வசனம்1-14 of 88    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
صٓ وَالۡقُرۡاٰنِ ذِى الذِّكۡرِؕ ﴿38:1﴾ بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا فِىۡ عِزَّةٍ وَّشِقَاقٍ ﴿38:2﴾ كَمۡ اَهۡلَـكۡنَا مِنۡ قَبۡلِهِمۡ مِّنۡ قَرۡنٍ فَنَادَوْا وَّلَاتَ حِيۡنَ مَنَاصٍ ﴿38:3﴾ وَعَجِبُوۡۤا اَنۡ جَآءَهُمۡ مُّنۡذِرٌ مِّنۡهُمۡ وَقَالَ الۡكٰفِرُوۡنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ ۖۚ ﴿38:4﴾ اَجَعَلَ الۡاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ اِنَّ هٰذَا لَشَىۡءٌ عُجَابٌ ﴿38:5﴾ وَانْطَلَقَ الۡمَلَاُ مِنۡهُمۡ اَنِ امۡشُوۡا وَاصۡبِرُوۡا عَلٰٓى اٰلِهَتِكُمۡ ۖۚ اِنَّ هٰذَا لَشَىۡءٌ يُّرَادُ ۖۚ ﴿38:6﴾ مَا سَمِعۡنَا بِهٰذَا فِى الۡمِلَّةِ الۡاٰخِرَةِ ۖۚ اِنۡ هٰذَاۤ اِلَّا اخۡتِلَاقٌ ۖۚ ﴿38:7﴾ ءَاُنۡزِلَ عَلَيۡهِ الذِّكۡرُ مِنۡۢ بَيۡنِنَاؕ بَلۡ هُمۡ فِىۡ شَكٍّ مِّنۡ ذِكۡرِىۡۚ بَلْ لَّمَّا يَذُوۡقُوۡا عَذَابِؕ ﴿38:8﴾ اَمۡ عِنۡدَهُمۡ خَزَآٮِٕنُ رَحۡمَةِ رَبِّكَ الۡعَزِيۡزِ الۡوَهَّابِۚ ﴿38:9﴾ اَمۡ لَهُمۡ مُّلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَافَلۡيَرۡتَقُوۡا فِى الۡاَسۡبَابِ ﴿38:10﴾ جُنۡدٌ مَّا هُنَالِكَ مَهۡزُوۡمٌ مِّنَ الۡاَحۡزَابِ ﴿38:11﴾ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّعَادٌ وَّفِرۡعَوۡنُ ذُو الۡاَوۡتَادِۙ  ﴿38:12﴾ وَثَمُوۡدُ وَقَوۡمُ لُوۡطٍ وَّاَصۡحٰبُ لْئَیْكَةِ ؕ اُولٰٓٮِٕكَ الۡاَحۡزَابُ  ﴿38:13﴾ اِنۡ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ﴿38:14﴾

38:1 ஸாத், அறிவுரை நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக! 38:2 ஆயினும், எவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள்தாம் பெரும் ஆணவத்திலும், பிடிவாதத்திலும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். 38:3 இவர்களுக்கு முன் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். (அவர்களுடைய தீயகதி வந்தபோது) அவர்கள் கூக்குரலிட்டார்கள். ஆயினும், அது தப்பிப்பதற்கான நேரமாய் இருக்கவில்லை. 38:4 அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர்; 38:5 என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!” 38:6 மேலும், சமுதாயத் தலைவர்கள் பின்வருமாறு கூறிக்கொண்டு வெளியேறிச் சென்றார்கள்: “செல்லுங்கள்; உங்களுடைய தெய்வங்களை வணங்குவதில் உறுதியாய் இருங்கள். திண்ணமாக, இவ்விஷயம் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றது; 38:7 அண்மைக்காலத்து எந்தச் சமுதாயத்திடமும் இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனைசெய்து கூறப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை. 38:8 நம்மிடையே, அல்லாஹ்வுடைய அறிவுரை இறக்கி வைக்கப்படுவதற்கு இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தாரா, என்ன?” உண்மை என்னவெனில், இவர்கள் என்னுடைய அறிவுரையின் மீது சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுவதற்குக் காரணம், இவர்கள் நான் தரும் வேதனையைச் சுவைக்கவில்லை என்பதுதான்! 38:9 என்ன, யாவற்றையும் மிகைத்தவனும் பெருங்கொடையாளனுமான உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இவர்களின் கைவசத்தில்தான் உள்ளனவா? 38:10 அல்லது இவர்கள் வானம், பூமி மற்றும் இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களா? அவ்வாறாயின், இவர்கள் உலகாயத ரீதியான உச்சகட்ட சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும். 38:11 பல கூட்டத்தினரிடையே இவர்கள் ஒரு சிறு கூட்டத்தினர்தாம்; இவர்கள் இதே இடத்தில் தோல்வி அடைய இருக்கின்றார்கள். 38:12 இவர்களுக்கு முன் நூஹுடைய சமூகத்தினரும், ஆத் சமூகத்தினரும், முளைகளுடைய ஃபிர்அவ்னும், 38:13 மற்றும் ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், ஐக்காவாசிகள் ஆகியோரும் கூட பொய்யெனத் தூற்றியிருக்கின்றார்கள். 38:14 கூட்டத்தினர் என்பது அவர்கள்தாம்! அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தூதர்களைப் பொய்யர்கள் என வாதிட்டார்கள். எனவே, என்னுடைய தண்டனையின் தீர்ப்பு (அவர்கள் மீது) விதிக்கப்பட்டுவிட்டது.

  அத்தியாயம் 38. ஸாத்   |  முன்  |     வசனம் 1-14 of 88    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-14
 15-26
 27-40
 41-64
 65-88