Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 32. அஸ்ஸஜ்தா    | முன் |   வசனம்1-11 of 30    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
الٓمّٓ ﴿32:1﴾ تَنۡزِيۡلُ الۡكِتٰبِ لَا رَيۡبَ فِيۡهِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِيۡنَؕ ﴿32:2﴾ اَمۡ يَقُوۡلُوۡنَ افۡتَرٰٮهُۚ بَلۡ هُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّكَ لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اَتٰٮهُمۡ مِّنۡ نَّذِيۡرٍ مِّنۡ قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَهۡتَدُوۡنَ  ﴿32:3﴾ اَللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِؕ مَا لَكُمۡ مِّنۡ دُوۡنِهٖ مِنۡ وَّلِىٍّ وَّلَا شَفِيۡعٍؕ اَفَلَا تَتَذَكَّرُوۡنَ ﴿32:4﴾ يُدَبِّرُ الۡاَمۡرَ مِنَ السَّمَآءِ اِلَى الۡاَرۡضِ ثُمَّ يَعۡرُجُ اِلَيۡهِ فِىۡ يَوۡمٍ كَانَ مِقۡدَارُهٗۤ اَلۡفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوۡنَ ﴿32:5﴾ ذٰلِكَ عٰلِمُ الۡغَيۡبِ وَالشَّهَادَةِ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُۙ ﴿32:6﴾ الَّذِىۡۤ اَحۡسَنَ كُلَّ شَىۡءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلۡقَ الۡاِنۡسَانِ مِنۡ طِيۡنٍۚ ﴿32:7﴾ ثُمَّ جَعَلَ نَسۡلَهٗ مِنۡ سُلٰلَةٍ مِّنۡ مَّآءٍ مَّهِيۡنٍۚ ﴿32:8﴾ ثُمَّ سَوّٰٮهُ وَنَفَخَ فِيۡهِ مِنۡ رُّوۡحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـــِٕدَةَ ؕ قَلِيۡلًا مَّا تَشۡكُرُوۡنَ ﴿32:9﴾ وَقَالُوۡٓا ءَاِذَا ضَلَلۡنَا فِى الۡاَرۡضِ ءَاِنَّا لَفِىۡ خَلۡقٍ جَدِيۡدٍ ؕ بَلۡ هُمۡ بِلِقَآءِ رَبِّهِمۡ كٰفِرُوۡنَ ﴿32:10﴾ قُلۡ يَتَوَفّٰٮكُمۡ مَّلَكُ الۡمَوۡتِ الَّذِىۡ وُكِّلَ بِكُمۡ ثُمَّ اِلٰى رَبِّكُمۡ تُرۡجَعُوۡنَ ﴿32:11﴾

32:1 அலிஃப், லாம், மீம். 32:2 எவ்வித ஐயமுமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கின்றது. 32:3 “இவர் சுயமாக இதனை இயற்றியுள்ளார்” என்று இம்மக்கள் கூறுகின்றார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமேயாகும்; அவர்களிடம் உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரும் வந்திருக்காத இந்தச் சமுதாயத்தினரை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! அவர்கள் அதன் மூலம் நேர்வழி பெறக்கூடும்! 32:4 அல்லாஹ் எத்தகையவன் எனில், வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் ஆறுநாட்களில் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். அவனைத் தவிர உங்களுக்கு பாதுகாப்பளிப்பவரும் யாரும் இல்லை. மேலும், அவனிடம் பரிந்துரை செய்பவரும் எவருமில்லை. இனியும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்களா, என்ன? 32:5 அவன் வானங்கள் முதல் பூமி வரை உலகின் எல்லாக் காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அந்நிர்வாகத்தைப் பற்றிய அறிக்கை ஒருநாள் அவனிடம் உயர்ந்து செல்கின்றது. அந்நாள் உங்கள் கணக்குப்படி ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். 32:6 அவன்தான் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், வலிமை மிக்கவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 32:7 அவன் படைத்த எந்த ஒரு பொருளையும் அழகாகவே படைத்துள்ளான். அவன் களிமண்ணிலிருந்து, மனிதனைப் படைக்கத் தொடங்கினான். 32:8 பின்னர் அவனுடைய சந்ததிகளை அற்பமான நீரைப் போன்ற ஒருவித சத்திலிருந்து படைத்தான். 32:9 பிறகு, குறைபாடு இல்லாதவாறு அவனைச் சீரமைத்து அவனுள் தன்னுடைய உயிரை ஊதினான். மேலும், உங்களுக்குக் காதுகளையும், இதயங்களையும் கொடுத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். 32:10 மேலும், “நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?” என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள். 32:11 இவர்களிடம் கூறும்: “உங்கள்மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!”

  அத்தியாயம் 32. அஸ்ஸஜ்தா   |  முன்  |     வசனம் 1-11 of 30    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-11
 12-22
 23-30