Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 29. அல்அன்கபூத்    | முன் |   வசனம்1-13 of 69    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
الٓمّٓ ۚ ﴿29:1﴾ اَحَسِبَ النَّاسُ اَنۡ يُّتۡرَكُوۡۤا اَنۡ يَّقُوۡلُوۡۤا اٰمَنَّا وَهُمۡ لَا يُفۡتَـنُوۡنَ ﴿29:2﴾ وَلَقَدۡ فَتَـنَّا الَّذِيۡنَ مِنۡ قَبۡلِهِمۡ فَلَيَـعۡلَمَنَّ اللّٰهُ الَّذِيۡنَ صَدَقُوۡا وَلَيَعۡلَمَنَّ الۡكٰذِبِيۡنَ ﴿29:3﴾ اَمۡ حَسِبَ الَّذِيۡنَ يَعۡمَلُوۡنَ السَّيِّاٰتِ اَنۡ يَّسۡبِقُوۡنَا ؕ سَآءَ مَا يَحۡكُمُوۡنَ ﴿29:4﴾ مَنۡ كَانَ يَرۡجُوۡا لِقَآءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍؕ وَهُوَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ ﴿29:5﴾ وَمَنۡ جَاهَدَ فَاِنَّمَا يُجَاهِدُ لِنَفۡسِهٖؕ اِنَّ اللّٰهَ لَـغَنِىٌّ عَنِ الۡعٰلَمِيۡنَ ﴿29:6﴾ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَـنُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّاٰتِهِمۡ وَلَـنَجۡزِيَنَّهُمۡ اَحۡسَنَ الَّذِىۡ كَانُوۡا يَعۡمَلُوۡنَ ﴿29:7﴾ وَوَصَّيۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَيۡهِ حُسۡنًا ؕ وَاِنۡ جَاهَدٰكَ لِتُشۡرِكَ بِىۡ مَا لَـيۡسَ لَـكَ بِهٖ عِلۡمٌ فَلَا تُطِعۡهُمَا ؕ اِلَىَّ مَرۡجِعُكُمۡ فَاُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿29:8﴾ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَـنُدۡخِلَـنَّهُمۡ فِى الصّٰلِحِيۡنَ  ﴿29:9﴾ وَمِنَ النَّاسِ مَنۡ يَّقُوۡلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوۡذِىَ فِى اللّٰهِ جَعَلَ فِتۡنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِؕ وَلَٮِٕنۡ جَآءَ نَـصۡرٌ مِّنۡ رَّبِّكَ لَيَـقُوۡلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمۡؕ اَوَلَـيۡسَ اللّٰهُ بِاَعۡلَمَ بِمَا فِىۡ صُدُوۡرِ الۡعٰلَمِيۡنَ ﴿29:10﴾ وَلَيَـعۡلَمَنَّ اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَلَيَـعۡلَمَنَّ الۡمُنٰفِقِيۡنَ  ﴿29:11﴾ وَقَالَ الَّذِيۡنَ كَفَرُوۡا لِلَّذِيۡنَ اٰمَنُوا اتَّبِعُوۡا سَبِيۡلَـنَا وَلۡـنَحۡمِلۡ خَطٰيٰكُمۡ ؕ وَمَا هُمۡ بِحٰمِلِيۡنَ مِنۡ خَطٰيٰهُمۡ مِّنۡ شَىۡءٍؕ اِنَّهُمۡ لَـكٰذِبُوۡنَ ﴿29:12﴾ وَلَيَحۡمِلُنَّ اَ ثۡقَالَهُمۡ وَاَ ثۡقَالًا مَّعَ اَثۡقَالِهِمۡ وَلَـيُسۡــَٔـلُنَّ يَوۡمَ الۡقِيٰمَةِ عَمَّا كَانُوۡا يَفۡتَرُوۡنَ ﴿29:13﴾

29:1 அலிஃப், லாம், மீம். 29:2 “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன? 29:3 உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை! 29:4 தீமைகளைச் செய்வோர், நம்மை மிகைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்களா, என்ன? அவர்கள் எடுக்கும் தீர்மானம் மிகவும் மோசமானதாகும். 29:5 அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்த்திருப்பவர்கள் (தெரிந்துகொள்ள வேண்டும்:) அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தே தீரும். மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 29:6 எவன் ஜிஹாத் செய்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அதனை செய்கின்றான். திண்ணமாக, உலக மக்களை விட்டு அல்லாஹ் தேவைகள் அற்றவன். 29:7 மேலும், எவர்கள் நம் பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களைவிட்டு அவர்களின் தீமைகளை நாம் களைந்துவிடுவோம். மேலும், நாம் அவர்களுக்கு அவர்களின் அழகிய செயல்களுக்குரிய கூலியையும் வழங்குவோம். 29:8 தன்னுடைய தாய் தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். ஆனால், எதை (அதாவது, எந்தக் கடவுள் எனக்கு இணையானது என்பதை) நீ அறிய மாட்டாயோ அதனை எனக்கு இணையாக்கும்படி அவர்கள் (பெற்றோர்) உன்னை வற்புறுத்தினாலோ அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே. என்னிடம்தான் நீங்கள் அனைவரும் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருந்தீர்களோ அவற்றை நான் உங்களுக்கு அறிவிப்பேன். 29:9 மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருப்பார்களோ அவர்களை நாம் திண்ணமாக, சான்றோர்களுடன் சேர்த்துவிடுவோம். 29:10 மனிதர்களில் சிலர் உள்ளனர். “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டால் மக்கள் தரும் இந்தச் சோதனையை அல்லாஹ்வுடைய தண்டனை போன்று கருதிவிடுகின்றார்கள். ஆனால், உம்முடைய இறைவனிடமிருந்து வெற்றியும் உதவியும் வந்துவிடுமாயின், இவர்களே கூறுவார்கள், “திண்ணமாக நாங்கள் உங்களுடன்தானே இருந்தோம்” என்று! உலக மக்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனன்றோ? 29:11 மேலும், அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; நம்பிக்கை கொண்டவர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்பதை! 29:12 இந்நிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம் “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள்; உங்களுடைய பாவங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களின் பாவங்களிலிருந்து சிறிதளவுகூட இவர்கள் சுமந்து கொள்ளக் கூடியவர்களல்லர். நிச்சயமாக இவர்கள் பொய் சொல்கின்றார்கள். 29:13 ஆம்! இவர்கள் தங்களுடைய சுமைகளையும் சுமப்பார்கள்; தங்கள் சுமைகளுடன் வேறு பல சுமைகளையும் சுமப்பார்கள். மேலும், இவர்கள் புனைந்துரைக்கின்றவற்றைப் பற்றி மறுமை நாளில் திண்ணமாக விசாரிக்கப்படுவார்கள்.

  அத்தியாயம் 29. அல்அன்கபூத்   |  முன்  |     வசனம் 1-13 of 69    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-13
 14-22
 23-30
 31-44
 45-51
 52-63
 64-69