Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 24. அந்நூர்    | முன் |   வசனம்1-10 of 64    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
سُوۡرَةٌ اَنۡزَلۡنٰهَا وَفَرَضۡنٰهَا وَاَنۡزَلۡنَا فِيۡهَاۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ لَّعَلَّكُمۡ تَذَكَّرُوۡنَ ﴿24:1﴾ اَلزَّانِيَةُ وَالزَّانِىۡ فَاجۡلِدُوۡا كُلَّ وَاحِدٍ مِّنۡهُمَا مِائَةَ جَلۡدَةٍوَّلَا تَاۡخُذۡكُمۡ بِهِمَا رَاۡفَةٌ فِىۡ دِيۡنِ اللّٰهِ اِنۡ كُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰهِ وَالۡيَوۡمِ الۡاٰخِرِۚ وَلۡيَشۡهَدۡ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الۡمُؤۡمِنِيۡنَ  ﴿24:2﴾ اَلزَّانِىۡ لَا يَنۡكِحُ اِلَّا زَانِيَةً اَوۡ مُشۡرِكَةً  وَّ الزَّانِيَةُ لَا يَنۡكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوۡ مُشۡرِكٌ ۚ وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الۡمُؤۡمِنِيۡنَ  ﴿24:3﴾ وَالَّذِيۡنَ يَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ ثُمَّ لَمۡ يَاۡتُوۡا بِاَرۡبَعَةِ شُهَدَآءَ فَاجۡلِدُوۡهُمۡ ثَمٰنِيۡنَ جَلۡدَةً وَّلَا تَقۡبَلُوۡا لَهُمۡ شَهَادَةً اَبَدًا ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الۡفٰسِقُوۡنَ ۙ ﴿24:4﴾ اِلَّا الَّذِيۡنَ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِكَ وَاَصۡلَحُوۡاۚ فَاِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ ﴿24:5﴾ وَالَّذِيۡنَ يَرۡمُوۡنَ اَزۡوَاجَهُمۡ وَلَمۡ يَكُنۡ لَّهُمۡ شُهَدَآءُ اِلَّاۤ اَنۡفُسُهُمۡ فَشَهَادَةُ اَحَدِهِمۡ اَرۡبَعُ شَهٰدٰتٍۭ بِاللّٰهِۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيۡنَ ﴿24:6﴾ وَالۡخَـامِسَةُ اَنَّ لَـعۡنَتَ اللّٰهِ عَلَيۡهِ اِنۡ كَانَ مِنَ الۡكٰذِبِيۡنَ  ﴿24:7﴾ وَيَدۡرَؤُا عَنۡهَا الۡعَذَابَ اَنۡ تَشۡهَدَ اَرۡبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِۙ اِنَّهٗ لَمِنَ الۡكٰذِبِيۡنَۙ ﴿24:8﴾ وَالۡخَـامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَيۡهَاۤ اِنۡ كَانَ مِنَ الصّٰدِقِيۡنَ  ﴿24:9﴾ وَلَوۡلَا فَضۡلُ اللّٰهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيۡمٌ ﴿24:10﴾

24:1 இது ஓர் அத்தியாயம்; இதனை நாம் இறக்கியருளினோம். இதனை நாம் விதியாக்கியிருக்கின்றோம். மேலும், இதில் தெளிவான கட்டளைகளையும் நாம் இறக்கியிருக்கின்றோம். (இதனால்) நீங்கள் பாடம் பெறக்கூடும்! 24:2 விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும். 24:3 விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண் ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண் ணையோ தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டாம். விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இறைவனுக்கு இணை வைப்பவனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இது இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. 24:4 எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். 24:5 ஆனால், எவர்கள் இந்தக் குற்றத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! அல்லாஹ் அவசியம் (அவர்கள் விஷயத்தில்) அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 24:6 ஆனால், யார் தம்முடைய மனைவியர் மீது அவதூறு சுமத்துகின்றார்களோ மேலும், அதற்குத் தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். 24:7 மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்!’ என்று கூற வேண்டும். 24:8 ‘இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்’ என்று அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி, 24:9 ஐந்தாவது தடவை இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்று அவள் அளிக்கும் சாட்சியம், அவளைவிட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும். 24:10 உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்து, மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இல்லாதிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்திவிட்டிருக்கும்!)

  அத்தியாயம் 24. அந்நூர்   |  முன்  |     வசனம் 1-10 of 64    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-10
 11-20
 21-26
 27-34
 35-40
 41-50
 51-57
 58-61
 62-64