Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 21. அல் அன்பியா    | முன் |   வசனம்1-10 of 112    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
اِقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِىۡ غَفۡلَةٍ مُّعۡرِضُوۡنَۚ ﴿21:1﴾ مَا يَاۡتِيۡهِمۡ مِّنۡ ذِكۡرٍ مِّنۡ رَّبِّہِمۡ مُّحۡدَثٍ اِلَّا اسۡتَمَعُوۡهُ وَهُمۡ يَلۡعَبُوۡنَۙ ﴿21:2﴾ لَاهِيَةً قُلُوۡبُهُمۡ ؕ وَاَسَرُّوا النَّجۡوَىۖ الَّذِيۡنَ ظَلَمُوۡا ۖ  هَلۡ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثۡلُكُمۡ ۚ اَفَتَاۡتُوۡنَ السِّحۡرَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ  ﴿21:3﴾ قٰلَ رَبِّىۡ يَعۡلَمُ الۡقَوۡلَ فِى السَّمَآءِ وَالۡاَرۡضِ وَهُوَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ ﴿21:4﴾ بَلۡ قَالُوۡۤا اَضۡغَاثُ اَحۡلَامٍۢ بَلِ افۡتَـرٰٮهُ بَلۡ هُوَ شَاعِرٌ ۖۚ فَلۡيَاۡتِنَا بِاٰيَةٍ كَمَاۤ اُرۡسِلَ الۡاَوَّلُوۡنَ ﴿21:5﴾ مَاۤ اٰمَنَتۡ قَبۡلَهُمۡ مِّنۡ قَرۡيَةٍ اَهۡلَـكۡنٰهَاۚ اَفَهُمۡ يُؤۡمِنُوۡنَ  ﴿21:6﴾ وَمَاۤ اَرۡسَلۡنَا قَبۡلَكَ اِلَّا رِجَالًا نُّوۡحِىۡۤ اِلَيۡهِمۡ فَسۡـــَٔلُوۡۤا اَهۡلَ الذِّكۡرِ اِنۡ كُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿21:7﴾ وَمَا جَعَلۡنٰهُمۡ جَسَدًا لَّا يَاۡكُلُوۡنَ الطَّعَامَ وَمَا كَانُوۡا خٰلِدِيۡنَ  ﴿21:8﴾ ثُمَّ صَدَقۡنٰهُمُ الۡوَعۡدَ فَاَنۡجَيۡنٰهُمۡ وَمَنۡ نَّشَآءُ وَاَهۡلَكۡنَا الۡمُسۡرِفِيۡنَ ﴿21:9﴾ لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَيۡكُمۡ كِتٰبًا فِيۡهِ ذِكۡرُكُمۡؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ  ﴿21:10﴾

21:1 நெருங்கி வந்திருக்கிறது; மக்களுக்கு அவர்களின் விசாரணைக்கான நேரம்! எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். 21:2 அவர்களுடைய இறைனிடமிருந்து புதிது புதிதாக எந்த அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை விருப்பமின்றியே செவியேற்கிறார்கள்; கேளிக்கைகளிலும் இலயித்துக் கொண்டிருக்கிறார்கள். 21:3 அவர்களுடைய உள்ளங்கள் (வேறு சிந்தனைகளில்) மூழ்கியிருக்கின்றன. கொடுமையாளர்கள் தமக்கிடையே இரகசியமாகப் பேசிக்கொள்கின்றார்கள். “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தானே! இதனை நீங்கள் கண்கொண்டு பார்த்தும் மாயவலையில் சிக்கிக் கொள்வீர்களா, என்ன?” 21:4 அதற்கு இறைத்தூதர் கூறினார்: “என்னுடைய இறைவன் வானம் மற்றும் பூமியில் பேசப்படுபவை அனைத்தையும் அறிகின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.” 21:5 அதற்கு அவர்கள் கூறுகின்றார்கள்: “இவை வீண் கனவுகள்; இல்லையில்லை இவை, இவர் கற்பனை செய்து கொண்டவை. இன்னும் சொல்லப்போனால், இவர் ஒரு கவிஞரே! இல்லையென்றால் முற்காலத்து இறைத்தூதர்கள் சான்றுகளுடன் அனுப்பப்பட்டதுபோல் இவரும் நமக்கு ஒரு சான்றினைக் கொண்டுவரட்டும்!” 21:6 உண்மை யாதெனில், இவர்களுக்கு முன்னால் நாம் அழிவிற்குள்ளாக்கிய எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இனி, இவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்களா? 21:7 மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 21:8 அத்தூதர்களுக்கு உணவு உட்கொள்ளாத உடலை நாம் அளிக்கவில்லை. மேலும், அவர்கள் நித்திய ஜீவிகளாயும் இருக்கவில்லை. 21:9 பின்னர் பாருங்கள், நாம் அவர்களிடம் அளித்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். மேலும் அவர்களையும், நாம் யார் யாரை நாடினோமோ அவர்கள் அனைவரையும் காப்பாற்றினோம். மேலும், வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம். 21:10 (மக்களே!) உங்களுக்கு ஒரு வேதத்தை அனுப்பியுள்ளோம். அதில் உங்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. என்ன, நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்களா?

  அத்தியாயம் 21. அல் அன்பியா   |  முன்  |     வசனம் 1-10 of 112    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-10
 11-29
 30-41
 42-50
 51-75
 76-93
 94-112