Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 15. அல்ஹிஜ்ர்    | முன் |   வசனம்1-15 of 99    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
الۤرٰ تِلۡكَ اٰيٰتُ الۡـكِتٰبِ وَقُرۡاٰنٍ مُّبِيۡنٍ ﴿15:1﴾ رُبَمَا يَوَدُّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَوۡ كَانُوۡا مُسۡلِمِيۡنَ ﴿15:2﴾ ذَرۡهُمۡ يَاۡكُلُوۡا وَيَتَمَتَّعُوۡا وَيُلۡهِهِمُ الۡاَمَلُ فَسَوۡفَ يَعۡلَمُوۡنَ  ﴿15:3﴾ وَمَاۤ اَهۡلَـكۡنَا مِنۡ قَرۡيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعۡلُوۡمٌ ﴿15:4﴾ مَا تَسۡبِقُ مِنۡ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسۡتَاْخِرُوۡنَ ﴿15:5﴾ وَ قَالُوۡا يٰۤاَيُّهَا الَّذِىۡ نُزِّلَ عَلَيۡهِ الذِّكۡرُ اِنَّكَ لَمَجۡنُوۡنٌؕ  ﴿15:6﴾ لَوۡ مَا تَاۡتِيۡنَا بِالۡمَلٰۤٮِٕكَةِ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِيۡنَ ﴿15:7﴾ مَا نُنَزِّلُ الۡمَلٰۤٮِٕكَةَ اِلَّا بِالۡحَـقِّ وَمَا كَانُوۡۤا اِذًا مُّنۡظَرِيۡنَ  ﴿15:8﴾ اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّكۡرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوۡنَ ﴿15:9﴾ وَلَـقَدۡ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِكَ فِىۡ شِيَعِ الۡاَوَّلِيۡنَ ﴿15:10﴾ وَمَا يَاۡتِيۡهِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا كَانُوۡا بِهٖ يَسۡتَهۡزِءُوۡنَ  ﴿15:11﴾ كَذٰلِكَ نَسۡلُكُهٗ فِىۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِيۡنَۙ ﴿15:12﴾ لَا يُؤۡمِنُوۡنَ بِهٖۚ وَقَدۡ خَلَتۡ سُنَّةُ الۡاَوَّلِيۡنَ ﴿15:13﴾ وَلَوۡ فَتَحۡنَا عَلَيۡهِمۡ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوۡا فِيۡهِ يَعۡرُجُوۡنَۙ  ﴿15:14﴾ لَـقَالُوۡۤا اِنَّمَا سُكِّرَتۡ اَبۡصَارُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٌ مَّسۡحُوۡرُوۡنَ  ﴿15:15﴾

15:1 அலிஃப், லாம், றா. இறைமறையின் மற்றும் தெளிவான குர்ஆனின் வசனங்களாகும் இவை. 15:2 (இன்று இஸ்லாத்தின் அழைப்பை) ஏற்க மறுத்தவர்கள் “நாமும் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கூறும் நேரம் விரைவில் வரும். 15:3 (நபியே!) அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடும்! அவர்கள் உண்டு மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொள்ளட்டும்! மேலும், அவர்களின் நப்பாசைகள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வைத்திருக்கட்டும்! இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்; 15:4 இதற்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோமோ அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது. 15:5 எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும் முன்பே அழியவும் முடியாது; அது முடிந்த பின்பு வாழவும் முடியாது. 15:6 இம்மக்கள் கூறுகின்றார்கள்: “இறை வாக்கு (திக்ர்) இறக்கியருளப்பட்டிருப்பவரே! திண்ணமாக, நீர் ஒரு பைத்தியக்காரர் ஆவீர். 15:7 நீர் உண்மையாளராய் இருப்பின் ஏன் எங்களிடம் வானவர்களை நீர் அழைத்து வருவதில்லை?” 15:8 நாம் வான வர்களை (வெறுமனே இறக்குவதில்லை.) அவர்கள் இறங்கும்போது சத்தியத்துடனே இறங்குவார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை. 15:9 திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம். 15:10 (நபியே!) உமக்கு முன் சென்று போன எத்தனையோ சமூகங்களுக்குத் தூதர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம். 15:11 அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதும் அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருக்கவில்லை. 15:12 இவ்வாறே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இந்நல்லுரையை (கம்பியைப் போன்று) செலுத்துகிறோம். 15:13 அதன்மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. தொன்றுதொட்டே இத்தகைய இயல்புடைய மக்களிடம் இதே நடைமுறைதான் இருந்து வருகிறது. 15:14 மேலும், வானத்தின் வாயிலொன்றை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டிருந்தாலும், அதில் அவர்கள் பட்டப் பகலிலே ஏறத் தொடங்கிவிட்டிருந்தாலும் 15:15 அப்பொழுதும் அவர்கள் இவ்வாறே கூறியிருப்பர்: “எங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன; சரியாகச் சொல்வதானால் எங்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது!”

  அத்தியாயம் 15. அல்ஹிஜ்ர்   |  முன்  |     வசனம் 1-15 of 99    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-15
 16-25
 26-44
 45-60
 61-79
 80-99