Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 14. இப்ராஹீம்    | முன் |   வசனம்1-6 of 52    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
الۤرٰ كِتٰبٌ اَنۡزَلۡنٰهُ اِلَيۡكَ لِـتُخۡرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوۡرِ  ۙ بِاِذۡنِ رَبِّهِمۡ اِلٰى صِرَاطِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ ﴿14:1﴾ اللّٰهِ الَّذِىۡ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ وَوَيۡلٌ لِّـلۡكٰفِرِيۡنَ مِنۡ عَذَابٍ شَدِيۡدِ ۙ ﴿14:2﴾ اۨلَّذِيۡنَ يَسۡتَحِبُّوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا عَلَى الۡاٰخِرَةِ وَيَصُدُّوۡنَ عَنۡ سَبِيۡلِ اللّٰهِ وَيَبۡغُوۡنَهَا عِوَجًا ؕ اُولٰۤٮِٕكَ فِىۡ ضَلٰلٍۢ بَعِيۡدٍ  ﴿14:3﴾ وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا بِلِسَانِ قَوۡمِهٖ لِيُبَيِّنَ لَهُمۡؕ فَيُضِلُّ اللّٰهُ مَنۡ يَّشَآءُ وَيَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ ؕ وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ ﴿14:4﴾ وَلَـقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰى بِاٰيٰتِنَاۤ اَنۡ اَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوۡرِ ۙ وَذَكِّرۡهُمۡ بِاَيّٰٮمِ اللّٰهِؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوۡرٍ ﴿14:5﴾ وَاِذۡ قَالَ مُوۡسٰى لِـقَوۡمِهِ اذۡكُرُوۡا نِعۡمَةَ اللّٰهِ عَلَيۡكُمۡ اِذۡ اَنۡجٰٮكُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ يَسُوۡمُوۡنَـكُمۡ سُوۡۤءَ الۡعَذَابِ وَ يُذَبِّحُوۡنَ اَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُوۡنَ نِسَآءَكُمۡ ؕ وَفِىۡ ذٰ لِكُمۡ بَلَاۤ ءٌ مِّنۡ رَّبِّكُمۡ عَظِيۡمٌ ﴿14:6﴾

14:1 அலிஃப், லாம், றா. (முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்; மக்களை, அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும் தனக்குத்தானே புகழுக்குரியோனுமாகிய 14:2 மேலும், வானங்கள் பூமியிலுள்ள அனைத்துக்கும் உரியவனுமாகிய அல்லாஹ்வின் பாதையின்பால் (கொண்டுவர வேண்டும் என்பதற்காக). சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அழிவைத் தரும் கடும் தண்டனை இருக்கிறது; 14:3 அவர்கள் எத்தகையவர்களெனில் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுக்கிறார்கள். அவ்வழி (தங்கள் விருப்பப்படி) கோணலாகிவிட வேண்டும் என்று நாடுகிறார்கள். இத்தகையவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார்கள். 14:4 தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம் (செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! பின்னர் அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிபிறழச் செய்கின்றான்; நாடுகின்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். 14:5 (இதற்கு முன்பு) மூஸாவையும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி, “உம் சமுதாயத்தினரை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாரும்; மேலும், அல்லாஹ்வின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை நினைவூட்டி, அவர்களுக்கு அறிவுரை வழங்கும்!” என்று கட்டளையிட்டிருந்தோம். பொறுமையாளராகவும் நன்றி செலுத்துபவராகவும் திகழும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சம்பவங்களில் பல சான்றுகள் இருக்கின்றன. 14:6 மூஸா தம்முடைய சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: “அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள பேருதவிகளை நினைத்துப் பாருங்கள்! உங்களுக்குக் கடுமையான துன்பம் இழைத்துக் கொண்டும், உங்கள் ஆண்மக்களைக் கொலை செய்து கொண்டும், உங்கள் பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து அவன் உங்களை விடுவித்தான்! இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.

  அத்தியாயம் 14. இப்ராஹீம்   |  முன்  |     வசனம் 1-6 of 52    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-6
 7-12
 13-21
 22-27
 28-34
 35-41
 42-52